அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!

வெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இல்லாமல் இருக்கும். அதன் காரணமாக பலரும் தங்களின் நிறத்தை அதிகரிப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பல ஆண்கள் மற்றும் பெண்களின் அக்குள் மட்டும் கருமையாக இருக்கும். இந்த கருமையைப் போக்க முடியாதா என்று பலர் நினைப்பார்கள். அதுமட்டுமின்றி, சிலர் அந்த கருமையைப் போக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினால், அதனால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே கண்டதை உபயோகிக்காமல், உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே போக்க முயற்சி செய்யுங்கள். இங்கு தமிழ் போல்ட்ஸ்கை அக்குளில் உள்ள கருமையைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்கள் என்னவென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சித்து நல்ல பலனைப் பெறுங்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் மிதமான அமிலம் உள்ளதோடு, இது மிகச்சிறந்த ப்ளீச்சிங் தன்மை கொண்டதும் கூட. எனவே அந்த உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அவற்றை அக்குளில் தேய்த்து 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அக்குள் கருமையைப் போக்கலாம். முக்கியமாக சென்சிடிவ் சருமத்தினருக்கு இது நல்லது.

எலுமிச்சை சாற்றின் அழகு நன்மைகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் இது மிகச்சிறந்த ப்ளீச்சிங் பொருள். அத்தகைய எலுமிசை சாற்றினை அக்குளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கை, கால்களில் உள்ள முடியை எப்படி வேக்சிங் முறையின் மூலம் நீக்குகிறீர்களோ, அதேப் போல் அக்குளில் உள்ள முடியையும் வேக்சிங் செய்து நீக்கினால், முடி வேரோடு வெளிவருவதோடு, கருமையாக காணப்படுவதும் நீங்கும்.

பப்பாளியில் பாப்பைன் அதிகம் உள்ளது. இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கும். எனவே தினமும் பப்பாளியை அரைத்து அதனை அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவி வந்தால், அக்குளில் உள்ள கருமை நீங்கும்.

வெள்ளரிக்காயும் சரும கருமையைப் போக்கும் சக்தியைக் கொண்டது. எனவே வெள்ளரிக்காயை அக்குளில் தினமும் இரண்டு முறை தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வாருங்கள்.

பேக்கிங் சோடா 
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அக்குளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ, அக்குள் கருமை நீங்கும்.

ஆரஞ்சு தோல் 
ஆரஞ்சு தோலை உலர்த்தி, பொடி பொடி செய்து, அதில் பால் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவி வந்தால், அக்குளில் இருக்கும் கருமை மறையும்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad