எண் 9 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் ~ tamil Numerology

எண் 9 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - செவ்வாய் (Mars):
இயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவார். எனவே சேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இரத்தத்தைப் பார்த்து இவர்கள் பயப்பட மாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப் பார்க்கலாம். மேலும் அதிகாரமுள்ள காவல்துறை, இராணுவம் ஆகிய தொழிலில் மிகவும் விருப்பம் உடையவர்கள் இவர்கள்தான்! மற்றவர்கள் பயப்படும் காரியங்களைத் துணிந்து ஏற்றுக் கொள்வார்கள். துணிவே துணை என்று நடை போடுவார்கள்.
இவர்களுக்கு முன்கோபமும் படபடப்பும் உண்டு. உடலும் சற்று முறுக்கேறி நிற்கும். நான்கு எண்காரர்களைப் போல் இவர்களுக்குக் கோபம், ரோஷம், தன்மானம் ஆகிய மூன்று குணங்களும் நிறைந்திருக்கும். எனவே இவர்களுக்கு எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எத்தொழிலிலும், பதவியிலும், நிர்வாகத்திலும் வல்லவர்கள். இவர்கள் ஓரளவு ஒல்லியானவர்களே! ஆண்களில் பெரும்பாலோர் மீசை வளர்ப்பதில் விருப்பம் உடையவர்கள். நாவன்மை மிகுந்தவர்கள்.

இவர்களில் அதிர்ஷ்டசாலிகள் மென்மேலும் அதிர்ஷ்டசாலிகளாகவும், துரதிர்ஷ்டசாலிகள் தொடர்ந்து துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். இந்த எண்காரர்களுக்கு உடலில் அடிக்கடி காயங்கள், விபத்துக்கள் போன்றவை ஏற்படும். ஆயினும் அதைக் கண்டு பயப்பட மாட்டார்கள்.
9&ம் எண்ணில் பிறந்தவர்களின் பெயர்கள் 8&ம் எண்ணில் மட்டும் இருந்து விட்டால் தற்கொலை முயற்சிகளும், வாகனங்களால் விபத்து உண்டு.
இந்தச் செவ்வாய்க் கிரக ஆதிக்கர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் லாரி, காளை மாண்டு வண்டிகள், குஸ்தி, நீச்சல் போட்டிகள், மிருகவேட்டை, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் மிகவும் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். சர்க்கஸ் விளையாட்டுக்களில் விருப்பமுடன் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். கார், சைக்கிள், லாரி, பஸ் ஆகியவற்றை மிகவும் வேகமாக ஓட்டுபவர்கள் இவர்கள் தான். இவர்கள் எதற்கும், எப்போதும் பயப்பட மாட்டார்கள்! மேலும் தங்களது நோக்கத்திற்காகக் கடுமையான உழைக்கவும் தயங்க மாட்டார்கள்.
இவர்கள் எப்போதும் அலைபாயும் மனத்தை உடையவர்களாக இருப்பார்கள். இறைவன் இவர்களின் மனத்தை அமைதியாக வைத்திருக்க அனுமதிப்பதில்லை போலும்!
இவர்கள் நடப்பதில் மிகவும் பிரியமுடையவர்கள்! இவர்களுக்கு என்னதான் வசதியிருப்பினும் கால் தேய நடந்து செல்வதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும், தனியார் ஸ்தாபனங்களிலும் தலைமைப் பதவியில் இவர்கள் நன்கு புகழ் பெறுவார்கள். இவர்கள் உழைப்பதில் சுகம் காண்பார்கள். சோம்பலை இவர்கள் வெறுப்பவர்கள். ஊர் சுற்றுவதிலும் அலாதிப் பிரியம் உடையவர்கள்.

நடுரோட்டில் ஒரு நோஞ்சானை ரௌடி ஒருவன் தாக்கினால் அதைக் கண்டு பொறுக்காமல், அந்த முரடனுடன் தைரியமாகச் சென்று போராடுபவர்கள் இவர்கள்தான். சிறு வயதுகளில் மிகவும் சிரமப்பட்டாலும், தங்ளது மன உறுதியினாலும், விடா முயற்சியினாலும், இவர்கள் எப்படியும் பிற்காலத்தில் முன்னேறி விடுவார்கள்.
இவர்கள் சுதந்திரப் போக்கு உடையவர்கள்! அவசரக்காரர்கள்! உணர்ச்சி மயமானவர்கள்! பிடிவாத குணம் இயற்கையிலேயே உண்டு. ஆபத்து மிகுந்த தொழிலில் இறங்கி விடுவார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். இவர்களின் சண்டைக் குணத்தால், குடும்பத்தில் அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் ஏற்படும். தங்களை எல்லோரும் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு இவர்களுக்கு எப்போதும் உண்டு.
எந்த நிர்வாகத்திலும் தலைமைப் பதவி அல்லது பொறுப்புகள் கிடைத்தால்தான், இவர்கள் அவற்றில் மிகவும் தீவிரமாகவும், சிறப்பாகவும் ஈடுபட்டு, அந்தக் காரியங்களைச் செய்து முடிப்பார்கள். இல்லை என்றால் அவைகளை அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கி விடுவார்கள். பின்பு அந்தக் காரியங்கள் கெட்டழிந்தாலும்கூட அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்.
இவர்களது திருமணம்
இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை (பிறவி எண், கூட்டு எண்) மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.
2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது! திருமண வாழ்க்கையே கசந்துவிடும். சில அன்பர்கள் மனைவியின் கொடுமையால் மனைவியை விட்டு ஓடத் துணிந்து விடுவார்கள். திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.
இவர்களது நண்பர்கள்
3, 6, 9 ஆகிய எண்களை உடைய அன்பர்கள் இவர்களுக்கு நல்ல நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் அமைவார்கள். 1ந்தேதி பிறந்தவர்களின் உதவி நடுத்தரமானதுதான். 2, 8 எண்காரர்களின் நட்பையும், கூட்டையும் (றிணீக்ஷீtஸீமீக்ஷீsலீவீஜீ) தவிர்த்துவிட்டால், பல நஷ்டங்களை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ளலாம்.
இவர்களது நோய்கள்
இவர்களது உடலில் ஏதாவது ஒரு நீண்டகாலப் பிணி இருக்கும். அடிக்கடி வாய்வுத் தொந்தரவுகள், வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இவர்களுக்குப் பல் வலி, பற்களில் பூச்சி விழுதல் போன்றவை ஏற்படும். கால் ஆணித் தொந்தரவுகள், பாதங்களில் வலி, வெடிப்புக்கள் ஆகியவை ஏற்படும். மிகவும் உஷ்ண தேகிகளாதலால், இவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கலும், மூல உபத்திரவங்களும், வலியும், கண்களில் எரிச்சலும் ஏற்படும். பகலைவிட இரவில் உற்சாகமாக இருப்பார்கள். நீண்ட நேரம் இரவில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டோ, பேசிக் கொண்டோ இருப்பார்கள். இவர்கள் தினமும் நீராகாரம் பருகி வந்தால் மிகவும் நல்லது! உடல் சூட்டைத் தணிக்க நீராகாரம் சிறந்த பானமாகும்.

நெருப்புக் காயங்கள், விபத்துக்கள் ஆகியவைகளால் உடலில் பாதிப்பும் உண்டு. இரத்தக் கட்டிகள், குடற்புண்கள், இரத்தம் கெடுதல் ஆகியவைகளால் பாதிப்பும் உண்டு! கூர்மையான ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொள்ளக்கூடாது! இந்த எண்காரர்களின் உடம்பில் எப்படியும் ஆபரேஷன்கள் (ஏதாவது ஒரு காரணத்திற்காவது) செய்ய வேண்டி வரும்.
இவர்களது தொழில்கள்
இவர்களில் பெரும்பாலோர் எஞ்சினியர்களாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பார்கள். இராணுவம், போலீஸ், மேனேஜர் போன்ற அதிகாரப் பதவிகளின் விருப்பம் உடையவர்கள். மேலும் கட்டிடம் கட்டுதல் (சிவீஸ்வீறீ ணிஸீரீரீ), இயந்திரங்கள், வியாபாரம், இரும்புச் சாமான்கள் உற்பத்தி ஆகியவை நல்ல அதிர்ஷ்டம் தரும். சிறந்த அமைச்சர்களாகவும், இராஜ தந்திரிகளாகவும் இருப்பார்கள். வான இயல் (கிமீக்ஷீஷீஸீணீutவீநீணீறீ) துறையும், இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

நாட்டிற்காகத் துப்பாக்கி ஏந்து வீரர்கள் இவர்களதான். அநீதிகளை எதிர்த்துப் போராடுவார்கள். இவர்கள் அரசியலிலும் ஈடுபடலாம். பலரை வைத்து வேலை வாங்கும் தலைவர்களாக, உயர் அதிகாரியாக, மேஸ்திரியாகப் புகழ் பெறுவார்கள். இவர்கள் வீரம் மிகுந்தவர்கள், துப்பறியும் தொழில் ஒத்து வரும். கலைத் தொண்டிலும், உணர்ச்சியைத் தூண்டும் எழுத்திலும் பிரகாசிப்பார்கள்! பொது மக்களுக்காகத் தியாகம் (உண்மையாகச்) செய்ய வல்லவர்கள். பிரபல வேட்டைக்£கரர்களாகவும், வனவிலங்குகளைத் திறமையாக அடக்கும் தொழிலும் சிவீக்ஷீநீus நன்கு பிரகாசிப்பார்கள். கால் பந்தாட்டம், டென்னிஸ், ஹாக்கி, பேட்மிண்டன், வாலிபால், சைக்கிள் பந்தயம் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்வார்கள்! சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் புகழ் பெறுவார்கள்.
இரயில், கார், லாரி ஆகியவை ஓட்டுநர்கள், தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றிலும் இவர்கள் தொழில் அமையும்.

செவ்வாய் யந்திரம்& செவ்வாய் & 21
8 3 10
9 7 5
4 11 6
செவ்வாய் மந்திரம் & செவ்வாய்& 21
தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வத்யுத்காந்தி ஸமப்ரம்
குமாரம் சக்தி ஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம்யஹம்
எண் 9 சிறப்புப் பலன்கள்
செயல் வீரர்களான 9ம் எண்காரர்களின் சிறப்புப் பலன்களைப் பார்ப்போம்.
எண்களில் முடிவானது இந்த எண்தான். எந்த எண்ணுடன் சேர்ந்தாலும், தன் இயல்புக் குணத்தை இழக்காதது இந்த எண்தான். 3 எண்ணுடன் 9 சேர்ந்தால் 12 கிடைக்கும்.
மீண்டும் கூட்டினால் (1+2) 3 என்ற எண்ணே மீண்டும் கிடைக்கும்.
எனவே 9 எண்காரர்கள் மற்ற எண்காரர்களுடன் சேர்ந்து செயல்பட்டுத் தங்களின் இயல்பிறக்கு ஏற்றவாறு அவர்களை மாற்றிவிடும் திறமை படைத்தவர்கள்!
இவர்கள் தீவிரமான மனப்போக்கும், தைரியமான செயல்பாடும் கொண்டவர்கள். எந்த முயற்சியையும் திட்டமிட்டு, அதன்படியே செயல்படுவார்கள். எத்துணைச் சோதனைகள் வந்தாலும், அவைகளைத் துணிவுடன் சந்தித்து வெற்றி பெறுவார்கள்! மற்றவர்கள் இவர்களை அலட்சியம் செய்தால் உடனே தட்டிக் கேட்பார்கள். மனதில் எப்போதும் தைரியம், தன்னம்பிக்கை உண்டு. தவறுகளைக் கண்டால் உடனே தட்டிக் கேட்கவும் தயங்கமாட்டார்கள்.
எதையும் திட்டமிட்டு, நேரம், காலம் பார்த்துத் தங்களது காரியங்க¬ளை நடத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் எதையும் போராடித்தான் பெற வேண்டும். இவர்களது பேச்சில் எப்போதும் வேகமும், அதிகாரமும் உண்டு! பயம் என்பது இருக்காது! செவ்வாய்க் கிரகம், தேவர்களுக்குத் தளபதியாவார். எனவே இவர்களுக்கச் சண்டையிடும் மனோபாவம் இயற்கையிலேயே அமைந்துவிடும். இரத்தம், விபத்து, கொலை போன்ற சம்பவங்களிலும் எல்லாம் துணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வார்கள். வேகம், சக்தி, அழிவு, போர் என்பவற்றின் எண் இது! ஆற்றல், ஆசை, தலைமை தாங்குதல் ஆதிக்கம் செலுத்தல் போன்ற குணங்கள் இவர்களிடம் இருக்கும். எதையும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சிந்திக்க மாட்டார்கள். விரைவிலேயே ஒரு முடிவு எடுத்து அதை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவார்கள். பலருக்கு உடலில் காயங்களும், சிறு விபத்துக்களும் ஏற்படும். பெரும்பாலோர் போர் வீரர்கள், காவல் துறை (றிளிலிமிசிணி), ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற கடினமான துறைகளிலும் புகழ்பெற்று விளங்குவார்கள்.

இவர்கள் நிதானம் குறைந்தவர்கள்! உணர்ச்சி வசப்பட்டவர்கள், பிறருக்கு அடங்கி நடக்க முடியாதவர்கள். பகைவர்களை இவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். பல சமயங்களில் இவர்களது பேச்சே இவர்களுக்குப் பல சண்டைகளைக் கொண்டு வந்துவிடும். பங்காளிச் சண்டை, மனைவி குடும்பத்தாருடன் ண்டை என்று அடிக்கடி பிரச்சினைக்குள்ளாவார்கள்! பிறர் தங்களைக் குறை கூறவதை மட்டும் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது!
சந்தர்ப்பங்களைச் சமாளிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக ஆற்றலும் உண்டு! அதிகாரத்துடன் மற்ற அனைவரையும் வேலை வாங்குவார்கள். இல்லையெனில் மனம் உடைந்து போவார்கள்.
இவர்கள் பல ஊர்களைச் சுற்றிப் பார்க்க விரும்புவார்கள். பலர் வெளிநாடுகளுக்கும் சென்று வருவார்கள். இவர்கள் ஆன்மீகத் தலைவர்களைக் கண்டவுடன் பணிந்து மிகவும் மதிப்பு கொடுப்பார்கள். பலருக்கு முன்னோர்கள் தேடி வைத்த செல்வங்கள் இருக்கும். இவர்களுக்கு மனைவியின் வழி சொத்துக்கள் கிடைக்கும் யோகமும் உண்டு. எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் மனோ தைரியமும் உண்டு. இவர்கள் கூர்மையான அறிவுடையவர்கள். எதிரிகளைச் சமயம் அறிந்து அவர்களை அழித்துவிடும் இயல்பினர். தீவிரமான ஆராய்ச்சிகளில் பலர் ஈடுபடுவார்கள். இவ்வளவு இருப்பினும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மிகவும் மதிப்புக் கொடுப்பார்கள். தெய்வம் உண்டு என்பதை முழுமையாக நம்புவார்கள்.
தங்களது தொழிலில் மிகவும் உற்சாக உள்ளவர்கள்! தங்களது தொழிலை பெருகச் செய்வது எப்படி என்பதைப் பற்றிய எண்ணத்திலேயே இருப்பார்கள். பலருக்கு அரசாங்கப் பணியிலும், காவல் துறையிலும், இராணுவத்திலும் மிகவும் ஈடுபாடு உண்டு.

அதிர்ஷ்ட நாட்கள் Lucky Dates
ஒவ்வொரு மாதமும் 9, 18, 27 ஆகிய நாட்களும், 6, 15, 24 ஆகிய நாட்களும் மிகவும் சிறப்பானவை! எனவே கூட்டு எண்கள் 6 மற்றும் 9 வரும் நாட்களும் இவர்களுக்கு மிகவும் சாதனமானவையே.
1, 10, 19, 28 மற்றும் எண் 1 வரும் நாட்களும் நடுத்தரமான பலன்களையே கொடுக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 நாட்களும் கூட்டு எண் 2 வரும் நாட்களும் துருதிர்ஷ்டமானவை! எந்தச் செயலும் தொடங்கக் கூடாது.

அதிர்ஷ்ட இரத்தினம் Lucky Gems
இவர்களுக்குப் பவழம் (CORAL) மிகவும் ஏற்றது! இரத்தக் கல் (BLOOD STONE) மிகவும் ஏற்றது! மேலும GARNET எனப்படும் இரத்தினக் கல்லும் மிகவும் நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள் Lucky Colours
இவர்களுக்கு கருஞ்சிவப்பு, நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் மிகவும் ஏற்றவை! ஆனால் கரும்பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் துரதிர்ணடமானவை.
9&ஆம் தேதி பிறந்தவர்கள்: வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுபவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். சுதந்திரமான எண்ணங்கள் நிறைந்தவர். புதிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் உடையவர்கள். மற்றவர்களை அடக்கி ஆள விரும்புவார்கள்! உற்றார், உறவினர்களிடம் கூட அடிக்கடி சண்டை போடு குணமும் உண்டு.

18&ஆம் தேதி பிறந்தவர்கள் : 
போராட்டமே இவர்களது வாழ்க்கையாக இருக்கும். இவர்கள் மற்றவர்களின் எச்சாக்கையைப் பொருட்படுத்தமாட்டார்கள். எதையும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவே முற்படுவார்கள். பேச்சுத் திறமை அதிகம் உண்டு. கட்டைப் பஞ்சாய்த்து செய்து வைக்கும் குணத்தவர்கள்.
அவசரம், பிடிவாதம், சுயநலம் ஆகியவற்றை விட்டுவிட்டால், இவர்கள் பெரும் சாதனைகளைப் படைக்கலாம். காதலிலும் அதிகாரம் காட்டி, அதன் மூலம் பிரச்சினைகளை உண்டு பண்ணிக் கொள்வார்கள். எப்போதும் உணர்சி வசப்பட்டவர்கள், மன அமைதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

27&ஆம் தேதி பிறந்தவர்கள்:
அறிவும், ஆற்றலும் நிறைந்தவர்கள். பலர் இராஜ தந்திரிகளாகவும் விளங்குவார்கள். சமூகத்தில் இவர்களுக்கு நல்ல செல்வாக்கு நிச்சியம் கிடைக்கும். இரவு நேரத்தில் வேலை செய்வது இவர்களுக்கு பிடிக்கும். இவர்களது திட்டங்கள் எல்லாம் நிச்சயம் வெற்றி அடையும். மனம் தளராமல் உழைப்பவர்கள். மற்ற இரு தேதிகளில் பிறந்த அன்பர்களை விட அமைதியானவர்கள். செயலில் நம்பிக்கை உடையவர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
நல்ல செயல்களின் மூலம் பேரும், புகழும் அடைவார்கள். சுதந்திர மனப்பான்மை உண்டு. நிதானமாக, அவசரப் படாமல் (சீரான திட்டத்துடன்) செயல்பட்டு வெற்றியைச் சீக்கிரம் அடைவார்கள். ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்தே காரியங்களில் ஈடுபடுவார்கள்.
எண் 9க்கான (செவ்வாய்) தொழில்கள்
இவர்கள் நிர்வாகச் சக்தி மிகுந்தவர்க! ஆயுதம் தாங்கிச் செய்யும் அனைத்துத் தொழிலும் வெற்றி பெறுவார்கள். இராணுவம், காவல் துறை, அறுவை மருத்துவர்கள் (ஷிuக்ஷீரீமீக்ஷீஹ்) போன்றவைகளில் பிரகாசிப்பார்கள். கார், ரயில், விமானம், ஓட்டுவதில் நாட்டம் உள்ளவர்கள். வேகமாகச் செல்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். பொறுமை இவர்களுக்குப் பிடிக்காத விஷயம்.
எலக்ட்ரிகல் என்ஜினியரிங் துறை, விவசாயத்துறையும் ஒத்து வரும். தீயுடனும், வெப்பத்துடனும் சேர்ந்த எந்தத் திட்டங்களிலும் வெற்றி பெறுவார்கள். எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் பிரகாசிப்பார்கள். சிலர் கோபக்காரர்களாக மாறி தீய செயல்களைச் செய்யவும் தயங்கவும் மாட்டார்கள்.
பொறியியல் தொடர்பான பெரிய பொறுப்புகளை தைரியமாக ஏற்று வெற்றி பெறுவார்கள். இரும்பு, எஃகு தொழில்களில் ஈடுபட்டால் சீக்கிரம் முன்னேறலாம். அச்சகத் தொழிலும் நன்கு அமையும்.
கட்டிடத் துறை, மின்சாரத் துறை, விளையாட்டுத் துறை, வாழை, மொச்சை, சிவப்பு தானியம் போன்றவை உற்பத்தி, உரம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தச்சு வேலை, ஸிமீணீறீ ணிstணீtமீ போன்ற தொழில்கள் அனைத்தும் வெற்றி தரும். ழிவீரீலீt கீணீtநீலீனீணீஸீகள் விளையாட்டு வீரர்கள். மலையேறும் வல்லுநர்கள் போன்றவையும் வெற்றி தரும்.
ஆன்மிகத்திலும் சிலர் தீவிரமாக, முழுமையான மனதுடன் ஈடுபடுவார்கள். சிலர் தொண்டு நிறுவனங்களையும் தொடங்கி, நன்கு நிர்வகிப்பார்கள்.
குறிப்பு
இதுவரையிலும் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களுக்கான தொழில்களைப் பார்த்தோம். உங்களது பிறவி எண்ணுக்கோ, விதி எண்ணுக்கோ, பொருத்தமான தொழிலாக இருக்க வேண்டியது முக்கியம். பெயர் எண்ணிக்கான தொழிலிலும் ஓரளவு வெற்றி பெறலாம்.
எனது அனுபவத்தில் எண்கணிதப்படியான தொழில்களே இறுதியில் மனிதனுக்கு அமைகின்றன. நீங்கள் கோடீஸ்வரராவது என்பது சரியான தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்தான் உள்ளது என்பதால் மிகந்த கவனம் தேவை!
எனவே ஒன்றுக்கு பல தடவை சிந்தித்து உங்களது தொழிலையோ, வியாபாரத்தையோ தொடங்குகள்! முடிந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலிலும் ஈடுபடுங்கள்! தொழிலில் உங்களை நம்பி முழுமையாக ஈடுபட்டால், அதில் வெற்றி பெறலாம். கோடிகளைக் குவிக்கலாம்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad