அவள் உங்களை கிறுக்குத்தனமாக காதலிக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் 7 விஷயங்கள்

உங்களுக்கே தெரியாமல் நண்பர் / தோழி என்ற போர்வையில் உங்களை அசுரத்தனமாக காதலிக்கும் நபர்கள் சுற்றிக் கொண்டிருக்கலாம். எங்கே காதலை வெளிப்படுத்தி உங்களுக்கு பிடிக்காமல் போய்விட்டால், கதை அம்பேல் ஆகிவிடுமோ, உங்களுடன் அதன் பிறகு பேச முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அந்த காதலை வெளிபடுத்தாமல் காத்திருப்பார்கள்.

ஆனால், அகத்தை பூட்டி வைத்தாலும், முகமும், அவர்களது மனோபாவமும் அவ்வப்போது காதலுடன் எட்டிப்பார்த்துக் கொண்டே தான் இருக்கும். அந்த சமயங்களில் அவர்களது சில செயல்பாடுகள் மற்றும் குணாதிசயங்களை வைத்து அவர் உங்களை கிறுக்குத்தனமாக காதலிக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும்….

நேரம் செலவழிப்பது
உங்களுடன் நேரம் செலவழிக்க மற்ற வேலைகளை கூட உதறிவிட்டு வருவது. எங்கே அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் கூட நீங்கள் செல்லும் இடத்தில் வந்து நிற்பது.

காரணங்கள் உண்டாக்குவது
உங்களை காண வேண்டும் என்பதற்காக காரணங்களை உருவாக்குவது. நம்ப முடியாதபடி இருப்பினும் கூட, அசடுவழிய முகத்தை வைத்துக் கொண்டு உங்களோடு இணைந்தே இருப்பது.

நீங்கள் விரும்பாதவை பிடிக்காது
ஏதேனும் நிகழ்வு, அல்லது அவர்கள் செய்த செயலாக இருப்பினும் கூட, உங்களுக்கு பிடிக்கவில்லை எனில், அதை விரும்பாமல் இருப்பது அல்லது மனம் நொந்து போவது.

முழுமையாக ஏற்றுக் கொள்வது
உங்களது குணங்களை, குணாதிசயங்களை நூறு சதவீதம் அப்படியே ஏற்றுக் கொள்ளும் அணுகுமுறை. தங்களுக்காக நீ இதை எல்லாம் மாற்றிக் கொள்ள தேவையில்லை என்று கூறும் விதம்.

நடத்தையிலும் நன்றாக நடப்பது
சிலர் பேச்சில் மட்டும் தான் மிகவும் பண்பாக பேசுவார்கள். ஆனால், நடத்தையில் அப்படி இருக்காது. நேரம் கிடைக்கும் போது பச்சோந்தியாக மாறிவிடுவார்கள். இப்படி இல்லாமல், நடத்தையிலும் கூட நாகரீகமாக நடந்துக் கொள்வது.

சார்ந்திருக்காமல் இருப்பது
எந்த ஒரு விஷயத்திற்கும் உங்களை சார்ந்திருக்காமல், உங்களையும் அவர்கள் மேல் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் இருப்பது.

உங்களை மட்டுமே நேசிப்பது
பேச்சுக்கு கூட, மற்றவர்களை விரும்புவது போல பேசாமல், உங்கள் மீது மட்டுமே தங்களது முழு நேசத்தையும் காட்டுவது. இவை எல்லாமே, அந்த நபர் உங்களை கிறுக்குத்தனமான முறையில் நேசித்துக் கொண்டிருக்கிறார் என்று வெளிப்படுத்துபவை ஆகும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad