ஏன் பெண்கள் உறவில் சிறந்தவர்கள் என்கிறார்கள்!

முடிச்ச அவுக்கிறது சுவாரஸ்யம்னா, அவுக்க முடியாத அளவுக்கு முடிச்சு போடுறது அதவிட சுவாரஸ்யம் என்பார்கள். அதை போல, சொல்வதை கேட்கும் கிளிப்பிள்ளை போன்றவர்களை காதலிப்பதை விட, எதை கூறினாலும் எதிர் கேள்வி கேட்பவர்களை காதலிப்பது சற்று சுவாரஸ்யமாக இருக்கும்.

ஏனெனில், ஆண்கள் எப்போதுமே தாங்கள் வைப்பது தான் சட்டம் என்று இருப்பார்கள். இதற்கு தடா போட்டு, நான் இப்படி தான் என்று பேசும் பெண்கள் உங்கள் காதலை மட்டும் அல்ல வாழ்க்கையையும் சுவாரஸ்யமாக மாற்றுவார்கள்.

இதில், கும்ப ராசி பெண்களின் மனோபாவமே இயற்கையாக இப்படி தான் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இவர்கள் காதல் உறவில் சிறந்து விளங்குபவர்கள் என்றும் கூறப்படுகிறது….

கடுமையானவர்கள்
இவர்களின் பாணியே தனித்து இருக்கும். நீ எனக்கு தேவை என்பதை புரிந்துக் கொள் என்பதைவிட, நீதான் எனக்கு வேண்டும் என்று கூறும் மனோபாவம் கொண்டிருப்பார்கள். பெண்கள் மென்மையானவர்கள் தான், ஆனால் கும்ப ராசி பெண்கள் சற்று கடுமையானவர்களாக இருப்பார்கள்.

பாரபட்சம் பாராதவர்கள்
ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பவர்கள். “அவுட் ஆப் தி பாக்ஸ்” என்பது போல சிந்திக்கும் குணமுடையவர்கள். இவர்களது பார்வை எப்போதும் தனித்து இருக்கும்.

பிடிவாதம்
இவர்களிடம் பிடிவாதம் இருக்கும். பிடிவாதம் நல்ல குணமல்ல என்று கூறுவார்கள். ஆனால், இவர்களை போன்ற கடுமையானவர்களுக்கு பிடிவாதம் உடன்பிறப்பு போல. முடிவு வரும் வரை விவாதத்தை முடிக்க மாட்டார்கள். தாங்கள் கூறியது தவறு என்ற போதும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். தனது பாதுகாப்பிற்காக எதையும் செய்வார்கள்.

நேரம் வேண்டும்
சிலர் நேரத்தை பற்றி யோசிக்காமல், ஓகே முடித்துவிடலாம் என கூறிவிடுவார்கள். ஆனால், இவர்கள் அப்படி அல்ல, தங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு தான் செய்வார்கள்.

உற்சாகமானவர்கள்
பெண்கள் என்றாலே புரிந்துக் கொள்வது சற்று கடினம் தான், அதில் இவர்கள் ஒருபடி மேல். கடுமையாகவும் இருப்பார்கள், சுவாரஸ்யமானவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் படைப்பாற்றல் மற்றும் திறந்த மனம் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

மாறாத உள்ளம் கொண்டவர்கள்
நேரத்திற்கு ஏற்றார் போல மாறிவிட மாட்டார்கள், மாறாத உள்ளம் கொண்டிருப்பார்கள். அது வேலையாக இருந்தாலும் சரி, மனிதர்களாக இருந்தாலும் சரி.

மெய்யறிவி தேடுவோர்
உண்மையான பதிலை அறியும் வரை கேள்விக் கேட்டுகொண்டே இருப்பார்கள். வாழ்நாள் முழுக்க அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள்.

தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள்
இவர்களது செயல்பாடு இன்று, நாளை என்ற நோக்கம் இன்றி தொலைநோக்கு சார்ந்ததாக இருக்கும். இன்று செய்யும் ஒரு செயலால் நாளை என்ன தாக்கம் ஏற்படும் என்ன சிந்தித்து செயல்படுவார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad