வேண்டாத கர்ப்பத்தை தடுக்கும் மருந்து

பாலியல் பலாத்காரம், அறியாப் பருவத்தில் உறவுகள் போன்றவற்றால் வேண்டாத கருவை ஒவ்வொரு வருடமும் 5 கோடி பெண்கள் சுமக்கிறார்கள். திடீரென்று ஏற்படும் இந்த முறையற்ற உறவுகளில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாலும், முறையான உறவுகளில் கூட கருத்தடை சாதனங்களின் பழுதால் இத்தகைய கர்ப்பம் ஏற்பட்டு விடுகிறது.

இப்படிப்பட்ட கர்ப்பத்தை தடுக்கும் விதமாக, உடலுறவு முடிந்த சில மணி நேரத்துக்குள் எடுத்துக்கொள்ளக் கூடிய சில மருந்துகள் வந்திருக்கின்றன. இதற்கு வாய்ப்பில்லாதவர்கள் மறைமுகக் கருக்கொலையில் இறங்குகிறார்கள். பல நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.

இப்படி வேண்டாத உறவு ஏற்பட்ட ஒரு வாரத்துக்கு கருவை வளராமல் தடுக்கும் ஆற்றலுடைய ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருக்கிறார், ஜி.பி. டால்வார் என்பவர். அமெரிக்காவின் ராக்பெல்லர் நிறுவன நிதி உதவியுடன் இந்த ஆய்வு நடைபெற்றது.

இந்த மருந்து என்ன செய்கிறது என்றால், கருவானது கர்ப்பப்பையில் உருவாகத் தொடங்கியவுடன், கருப்பையில் ஒட்டி வளரும். இதற்கு ஹார்மோன் உதவி அதிகமாக தேவைப்படுகிறது. இந்த ஹார்மோனின் செயல்பாட்டை மருந்து தற்காலிகமாக நிறுத்தி விடுகிறது. இதனால் கருமுட்டை கருவாக உருமாறினாலும், கர்ப்பப்பையில் தங்காமல் வெளியே வந்து விடுகிறது.

இந்த முறை மிக எளிதாக இருந்தாலும் இதற்கு நிறைய எதிர்ப்புகளும் இருக்கின்றன. இந்த முறை பண்பாட்டை, நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் என்கிறார்கள். ஒழுக்க ரீதியாக பல சிக்கல்களை இந்த மருந்து உருவாக்கலாம். மருத்துவ ரீதியாக கூட பக்கவிளைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்துகிறார்கள். அந்த பெண் மீண்டும் கருத்தரிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

ஆனால், இந்த குறைகள் எல்லாம் கலைந்து முழுமையான பாதுகாப்பான பக்கவிளைவுகள் இல்லாத தடுப்பூசியாக வரும் என்கிறார்கள். இந்த மருந்தால் உறவுக்குப் பின்னும் பாதுகாப்பு இருக்கும் என்று பெண்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad