பெண்ணுங்க அந்த விஷயத்திற்கு ரெடின்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்

ஆம்பளைக்கு எல்லாமே ஈசிதான். பட்டென்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விட்டுப் போய் விடுவார்கள் – அக்கம்பக்கம், இங்கிதம், சூழ்நிலை, வெட்கம் இதெல்லாம் ரொம்பப் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. எதையுமே படாரென்று கேட்டு விடவோ, பேசவோ அவர்களுக்குப் பிடிக்காது. பெரும்பாலும் தாங்கள் மனதில் நினைப்பதை குறிப்பால் உணர்த்துவார்கள்.

உறவுக்குப் போகலாம் என்பதைக் கூட கணவரிடம் பளிச்சென கூறுவதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை, பெரும்பாலும் செய்வதில்லை. அதற்கும் சில பரிபாஷைகளை வைத்திருப்பார்கள். மறைமுகமாகத்தான் சொல்வார்கள். அதைப் புரிந்து கொண்டு வீட்டுக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அதேசமயம், பெண்களின் உடல் ரீதியான சில மாற்றங்களை வைத்து அவர்கள் செக்ஸ் உறவுக்குத் தயாராக உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியுமாம். அதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் அவங்க கேட்காமலேயே நீங்களாக காரியத்தில் இறங்கி அவர்களை அசரடிக்க முடியும்…

உறவுக்கான மூட் அல்லது செக்ஸ் உணர்வுகள் எழுச்சியுற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதைக் கட்டுப்படுத்துவதிலேயே முக்கியக் கவனம் இருக்கும். அப்படிப்பட்ட பெண்களின் கைகளைப் பார்த்தால் அதை படு இறுக்கமாக உடம்போடு ஒட்டி வைத்துக் கொள்ள கொள்ள முயல்வதைக் காணலாம். லூசாக கைகளை விட மாட்டார்கள். கைகளை மார்புகளுக்கு குறுக்காக கட்டியபடியோ அல்லது உடம்போடு ஒட்டியபடியோ இருக்க முயற்சிப்பார்கள். அப்படிச் செய்வதன் மூலம் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

இன்னொரு அறிகுறியும் இருக்கிறது. அதாவது உடல் ரீதியாக உணர்ச்சிவசப்படும் போது, மூச்சு விடுவது வேகமாகும். அதாவது வழக்கத்தை விட வேகமாக மூச்சு விடுவார்கள். காற்றை உள்ளிழுப்பதும், வெளி விடுவதும் வழக்கத்தை விட வேகமாக இருக்கும் என்பதால் மார்புகள் வழக்கத்தை விட வேகமாக எழுந்து அடங்குவதைக் காண முடியும்.

இதயத் துடிப்பும் அதிகமாக இருக்கும். ஆர்கஸத்தை நோக்கி உடல் வேகமாக உந்தும் என்பதால் உடல் உறுப்புகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுவதே இந்த வேகமான மூச்சு விடுதலுக்கு முக்கியக் காரணம். இந்த அறிகுறியை உணர்ந்தால் உங்கள் மனைவி உறவுக்கான நல்ல மூடில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதற்காக வேகமாக மூச்சு விடும்போதெல்லாம் ‘அதற்குத்தான்’ என்று தப்பாக கணக்கிட்டு விடக் கூடாது… வேறு காரணமும் இருக்கலாம்.

இப்படி சின்னச் சின்னதாக பல அறிகுறிகள் தென்படும். இருப்பினும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு மாதிரி இருக்கலாம். எனவே தப்புக் கணக்குப் போடாமல் சரியாகக் கணித்து களத்தில் இறங்குவது உத்தமம்.

காமக் கலைகள் கற்றுத் தெரிந்து கொள்வதல்ல… அனுபவம்தான் நல்ல ஆசான். எனவே உரிய முறையில் உணர்ந்து, தெரிந்து, தெளிந்து, மகிழ்ச்சிக் கடலில் குதிங்க…!
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad