குழந்தை எனும் பேரதிசயம் பற்றி என்னலாம் தெரியும் உங்களுக்கு...?

பிரசவ காலம் பெண்ணுக்கு மறுஜென்மம். கருவைச் சுமந்து, பாதுகாக்கும் தாய்க்கு அந்த 9 மாதம் 9 நாட்களும் கர்ப்பப்பையில் நடைபெறும் எல்லாமே விந்தையான விஷயங்கள்.

சிறு துளியிலிருந்து உருவாகும் கருவில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன:

ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் 25 கோடி விந்தணுக்களில் ஒன்று மட்டும்தான் பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து கருவாக உருவாகிறது

22 நாட்களுக்குப் பிறகு, கருவின் இதயம் துடிக்க ஆரம்பிக்கும். கடுகு அளவில் இருக்கும் குழந்தையின் இதயம் ஒரு நிமிடத்துக்கு 157 முறை துடிக்கும்.

அதாவது கர்ப்ப காலம் முடியும் வரை குழந்தையின் இதயம், சாதாரணமாகத் துடிப்பதை விட இருமடங்கு வேகமாகத் துடிக்கும்.

6வது வாரத்தில் கருவில் இருக்கும் குழந்தை தட்டைப்பயிறு அளவுக்குத்தான் வளர்ந்திருக்கும். முகமும் பிறப்புறுப்பும் உருவாவது இப்போதுதான்.

9-12 வாரங்களில் தலைமுடி, புருவம், உடலில் உள்ள ரோமங்கள் வளர்ந்து, குழந்தை கதகதப்பாக இருப்பதற்கு உதவும்.

13வது வாரத்தில் கையளவு இருக்கும் குழந்தைக்கருவில் முக்கிய உறுப்புகள் அனைத்தும் உருவாகி, செயல்பட ஆரம்பிக்கும்.17வது வாரத்தில் கைரேகைகள் தோன்றும்.

குழந்தையின் வாழ்நாள் முழுக்க ரேகையில் எந்த மாற்றமும் ஏற்படாது.

8வது வாரத்தில் இருந்தே குழந்தை குட்டிக்கரணம் போட ஆரம்பிக்கும்.

ஆனால், 18வது வாரத்தில்தான் தாயால் அதை உணர முடியும். குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தை எடுத்துச் செல்லும் பாதை தொப்புள்கொடி. இதன் வழியாக ஒரு நிமிடத்துக்கு 500 மி.லி. ரத்தம் – அதாவது, தாயின் உடம்பிலிருக்கும் மொத்த ரத்தத்தில் 35 சதவிகிதம் குழந்தைக்குச் செல்கிறது.

20வது வாரத்தில், குழந்தை ஒரு நாளைக்கு 3 டேபிள்ஸ்பூன் அளவு சிறுநீர் கழிக்கும்.24வது வாரத்தில் குழந்தையின் காது மடல்கள் முழு வளர்ச்சி அடைந்துவிடும்.

குழந்தையால் கருவுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒலிக்கும் எல்லா சத்தங்களையும் கேட்க முடியும்.

குழந்தைக்கு மிகவும் பரிச்சயமாகிறது தாயின் குரல். அதனால்தான் பிறந்த பிறகு, தாயின் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் அழுகையை நிறுத்திவிடுகிறது.

26வது வாரத்தில் குழந்தை கண்களைத் திறந்து பார்க்க ஆரம்பிக்கும். ஆனால், இருட்டாக இருப்பதால் எதையும் பார்க்க முடியாது.

கர்ப்ப காலத்தின் கடைசி 3 மாதங்களில், கருக்குழந்தை தினமும் 14 கிராம் கொழுப்பு சேர்க்க ஆரம்பிக்கும்.

32வது வாரத்தில், குழந்தை வயிற்றைத் தொட்டாலே உணர்ந்து கொள்ளும். வலியையும் அறியும்.

கர்ப்ப காலத்தின் கடைசி கட்டத்தில் கருப்பை வழக்கத்தைவிட 500 – 1000 மடங்கு பெருத்திருக்கும்
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad