நீங்கள் மொபைல் போன் அதிக நேரம் பயன்படுத்துபவரா?...

மொபைல் போனை தொடர்ந்து பலமணிநேரம் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியானால், சில விஷயங்களை உங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். "மொபைல் போனை ஒரே கையில் தொடர்ந்து பல மணி நேரங்கள் பயன்படுத்துவதால், முழங்கையை மடக்கி பேச நேரிடுகிறது.

பல மணி நேரம் முழங்கையை மடக்கி இருப்பதால், ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு முழங்கையில் வலி ஏற்படும். அதோடு, முழங்கையை சுற்றியுள்ள தசைப் பகுதிகளிலும், வலி ஏற்படும்.

நரம்பு பாதிக்கப்படுதல், தசைப்பகுதி வலுவிழத்தல் போன்றவற்றால், தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் கொண்டு சேர்க்கும்.

எனவே, பல மணி நேரம் தொடர்ந்து மொபைல் போன் பேசுபவர்கள், ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மொபைல் போனை மாற்றி மாற்றி பேசுவது நல்லது. அல்லது ஹெட் செட் அணிந்தோ, ஹாண்ட்ஸ் ப்ரீ முறையிலோ, ஸ்பீக்கரை பயன்படுத்தியோ பேசலாம்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad