4 மாத குழந்தைக்கு தாயால் நடந்த கொடூரம்!!! பதை பதைக்கும் ஒரு நிமிடம் ??

பெண்ணாக பிறந்ததால் 4 மாத குழந்தையை கத்தியால் குத்தி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் படித்த வசதி யான குடும்பத்தைச் சேர்ந் தவர் நேகா கோயல் (வயது 35).இவரது கணவரும் வசதி படைத்த தானிய வியாபாரி.

இவர்களுக்கு 8 வயதில் மகள் இருக்கிறார். இந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்று நேகா ஆசைப்பட்டார். நீண்ட காலம் ஆகியும் நேகா கருத்தரிக்கவில்லை. இதனால் செயற்கை முறை கருத் தரிப்பு மூலம் கரு வுற்றார். குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என்று சிறப்பான பூஜைகள் செய்தார். ஆனால் 2&வதும் பெண்ணாக பிறந்ததால் நேகா அதிர்ச்சி அடைந்தார். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளானார்.

பெண் குழந்தை பிறந்து 4 மாதம் ஆன நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26&ந் தேதி திடீர் என்று குழந்தை மாயமானது. கணவர் மற்றும் குடும்பத்தினரிடமும் அக்கம் பக்கம் இருப்பவர்களிடமும் குழந்தைமாயமானதாக நேகா கூறினார். இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வந்து வீடு முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் பயன்படுத்தப்படாத ஏ.சி. மெஷினில் போர்வை யால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை பிணம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர். குழந்தை யின் கழுத்து உள்பட 17 இடங்களில் கத்தி குத்து இருந்தது.

எனவே குழந்தையை வீட்டுக்குள் இருந்த யாரோ ஒருவர்தான் கொலை செய்து இருக்க வேண்டும் என்று கருதிய போலீசார் தாய் நேகாவிடம் விசாரணை நடத்தினர். நேகா படுக்கை அறை, குளியல் அறையில் ரத்தம் சிதறி கிடந்தது. அந்த அறைகளில் பதிவான கைரேகை மற்றும் ரத்த பரிசோதனைகள் மூலம் குழந் தையை கொன்றது நேகா என உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து நேகாவை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர். ஆண்குழந்தை ஏக்கத்தில் இருந்த தனக்கு பெண்ணாக பிறந்ததால் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad