சுவாதியை கொலையாளி விபரம் வெளியானது ஆட்டங் கண்டது காவல் துறை!!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி நேற்று மாலை மர்மமான முறையில் புழல் சிறையில் மரணமடைந்தார்.

இந்நிலையில் ராம்குமாரை காவல்த்துறையினர் திட்டமிட்டு படுகொலை செய்து விட்டதாகவும், மேலும் சுவாதியை கொலை தொடர்பாக கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி பதிவில் இருந்தது ராம்குமார் இல்லை என்றும் அவர் பெயர் மணி என்று புது தகவலை சமூக வலைதளங்களில் பிரபலமான தமிழச்சி வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் தமிழச்சி, சுவாதியை கொலை செய்தது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரான கருப்பு முருகானந்தத்தின் கூலிப்படை தான் என்றும் அதற்கான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ராம்குமார் மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழச்சி அவரது முகநூல் பக்கத்தில் ராம்குமாருக்கு ஜாமின் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக போலீஸார் திட்டமிட்டு ராம்குமாரை கொலை செய்து விட்டதாக பதிவிட்டுள்ளார்.

சுவாதி படுகொலை விசாரணையில் இன்னும் பல கொலைகள் தொடரும். அது ராம்குமாரோடு முடியாது என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள தமிழச்சி சுவாதி படுகொலை செய்யப்பட்ட சில தினங்களில் வீடியோவில் பதிவான ஒரு மர்ம நபர் குறித்த காட்சியை பத்திரிகைகள் வெளியிட்டன. அதற்கு பிறகே இன்னொரு வீடியோவில் ராம்குமார் நடந்து செல்வதாக கூறி மற்றொரு வீடியோ காட்சி காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டது.

முதலில் காட்டிய மர்ம நபர் யார்? அவரை குறித்து தமிழக காவல்துறை ஏன் விசாரணை நடத்தவில்லை? என்கிற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. இரண்டு காட்சியில் இருப்பவர்களும் ராம்குமார் தான் என்று மக்களை நம்ப வைத்துவிட்டார்கள்.

ஆனால், முதல் காட்சியில் உள்ள மர்ம நபரை காப்பாற்றத்தான் அரசு அதிகார அமைப்புகள் ராம்குமாரை குற்றவாளியாக்க முற்பட்டது.

காவல்துறை வெளியிட்ட முதல் படத்தில் இருப்பவர் பெயர் “மணி”. இவருடைய அப்பா பெயர் இசக்கி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். அம்மா மாரி.

“தேவர் பேரணி மாடசாமி பிலட்டிங் காண்ரக்டர் இல் மணி வேலை செய்கிறார். இவர் கருப்பு முருகானந்தம் கூலிப்படைகளில் ஒருவர். இவருடைய சொந்த ஊர் முத்தூர் (சிவந்திப்பட்டி) நெல்லை மாவட்டம்.

சுவாதியை படுகொலை செய்தவர்களில் இவரும் இருந்தார். கொலை நடந்த பின் தன் ஊருக்கு 2 மாதங்களாக செல்லாமல் தலைமறைவாக இருந்த மணி 10 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதுவும் மொட்டை தலையோடு.

இச்செய்தியை நான் ஏன் பதிவு செய்யவில்லை என்றால் இத்தகவல் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அல்லது கருப்பானந்தம் கூலிப்படைகள் அவரையும் கொன்றுவிடக் கூடும். இல்லாவிட்டால் மீண்டும் இவர் தலைமறைவாகி விடுவார் என்று கவனமாக இருந்தேன்.

நாளை 19 செப்டம்பர் ராம்குமார் ஜாமீன் மனு விசாரணைக்கு பின் ராம்குமார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகே சுவாதி படுகொலை தொடர்பான நபர்கள் குறித்து பேச நினைத்திருந்தேன். ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். படுகொலைக்கு தொடர்பற்ற அவரே படுகொலை செய்யப்பட்டு விட்டார்.

முத்தூர் வாசிகளே!

உங்கள் ஊரைச் சேர்ந்த மணி இன்னும் சில மணி நேரங்களில் கொல்லப்படலாம். ஆனால் அது தற்கொலை என்றே சொல்லப்படும். அல்லது மணி தலைமறைவாகலாம். 2 மாதத்திற்கு பிறகு வந்தவன் 2 வருடங்களுக்கு பிறகு வரலாம். அல்லது வராமலேயே போகலாம். ஏனென்றால் சேர்ந்த இடம் அப்படி.

ஒருவேளை இவனெல்லாம் ‘அப்ருவர்’ ஆனால் கூட காவல்துறையே தற்கொலை செய்துவிடும். பொதுமக்கள் செய்தால் தான்டா கொலை. அதையே காவல்துறை செய்தால் தற்கொலைடா. இதுதாண்டா தற்போதைய தமிழ்நாட்டு போலிஸ் பாணி. இந்த அரசியல் புரியலன்னா உன் மரணமும் தற்கொலையில் தான்டா முடியும்!

(பி.கு: இப்படி ஒரு நபர் அந்த ஊரிலேயே இல்லை என்றும் செய்திகள் வரும். அதையும் நாம் பார்ப்போம்) என்று பதிவிட்டுள்ளார்.

ராம்குமார் மற்றும் சுவாதி மரணம் தொடர்பாக தமிழச்சியின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad