ஆண்களின் உணர்வுகளை சுண்டி இழுக்கும் பெண்களின் ஆடை!

ஆடை பாதி... ஆள் பாதி என்பார்கள், ஆம் ஒருவரின் அழகை நிர்ணயிப்பதில் ஆடைக்கும் முக்கிய பங்கு உண்டு.

நாம் ரோட்டில் நடந்துசென்றால் கூட மற்றவர்களின் பார்வை நம் மீது விழுவதற்கு நமது ஆடையே காரணமாகும்.

இதில் ஆடைகளின் நிறத்திலும் வித்தியாசங்கள் உண்டு, குறிப்பாக பளிச்சென இருக்கும் சிவப்பு நிறம், இந்த சிவப்பு காதலின் அறிகுறியாகும்.

பெண்கள் இந்த நிற ஆடைகளை அணிந்தால் ஆண்களுக்கு காதல் உணர்வுகள் ஊற்றெடுக்கிறது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

காதலர் தினத்தில் காதலிக்கும் நபருக்கு பரிசாக சிவப்பு ரோஜா கொடுப்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

அதேபோல தனது காதலி சிவப்பு நிற உடையணிந்து வருவதை பார்த்தால் அந்த ஆணுக்கு காதல் உணர்வு கிளர்ந்தெழும்புகிறது.

எனவே, பெண்கள் தனியாக செல்லும்போதோ, காதலரை சந்திக்கும்போது சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டாம் என உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதே போன்று பெண்கள் அணியும் கவர்ச்சியான ஆடைகள் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன என ஆய்வு கூறுகிறது.

பெண்கள் அணியும் வசீகர ஆடைகள், ஆண்களின் ஏக்கங்களை அதிகரிப்பதோடு, அவர்களின் தாம்பத்திய வாழ்வின் திருப்தியையும் திருடிக்கொள்கின்றன என லீனாய்ட் எனும் ரஷ்ய மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெண்கள் அணியும் ஆடைகளால், நிஜத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், மாயபிம்பத்துக்குள் சிக்கும் ஆண்கள், சில நேரங்களில் மனம் மற்றும் உடல்நலரீதியான பாதிப்பிற்கும் ஆளாகிறார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad