மகளின் பிணத்தை வைத்து பிச்சை எடுத்த தந்தை: நெஞ்சை உருக்கும் சம்பவம்....

மகளின் சடலத்தை ஊருக்கு கொண்டு செல்ல பணம் இல்லாததால், சடலத்தை வைத்து தந்தை பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி மாவட்டத்தில் உள்ள சுவட்டாலி என்னும் பகுதியில் வசித்து வந்த ஒருவரின் மகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனே தன் மகளை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைகாக அனுமதித்துள்ளார்.

சிகிச்சை பலனளிக்கால் அவர் மகள் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழக்க, சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நினைத்த அவர் அதற்காக இலவச அவசரஊர்தி வாகனத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். கையில் பணம் இல்லாததால் செய்வதறியாது திகைத்த அவர், தன் மகளின் சடலத்தை சாலையோர நடைபாதையில் போட்டு வாகன செலவுக்காக பிச்சை எடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் ஒடிசாவில் அவசரஊர்தி மறுக்கபட்டதால் தன் மனைவி சடலத்தை கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad