காதலி கடித்ததில் காதலன் மரணம்: காதல் விளையாட்டு வினையானது

மெக்சிகோவில் காதலி ஒருவர் தன்னுடைய காதலனுடைய கழுத்தில் செல்லமாக கடித்ததில் காதலன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

17 வயதான ஜூலியோ மகியாஸ் என்ற இளைஞன் 24 வயதான பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் அந்த இளைஞன் தன்னுடைய வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு தன்னுடைய காதலியை அழைத்தான். ஜூலியோ மகியாஸ் தன்னுடைய காதலியுடன், குடும்பத்தினருடன் சேர்ந்து உணவும் உண்ணும் நேரத்தில் வலிப்பு வந்து மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஜூலியோ அங்கு உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு காரணம், கழுத்து பகுதியில் ஏற்பட்ட இரத்த உறைவால் ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு என அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்தார். மேலும் அவரது கழுத்தில் யாரோ கடித்திருக்கிறார் எனவும் ஹிக்கி என்னும் காதல் விளையாட்டால் இப்படி நடந்திருக்கலாம் என அவர் கூறினார்.

இதனால் ஜூலியோவின் குடும்பத்தினர் அவரது காதலியை கோபமாக பார்த்தனர். விஷயத்தை புரிந்து கொண்ட அந்த பெண் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

மேற்கத்திய நாடுகளில் ஹிக்கி என்னும் காதல் கடித்தல் பிரபலமானது. காதல் ஜோடிகள் ஒருவருக்கொருவர் கழுத்தில் கடித்து கடித்து விளையாடும் காதல் விளையாட்டு இந்த ஹிக்கி.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad