கருத்தடை மாத்திரைகளும் அதன் பக்கவிளைவுகளும்…

இப்போதெல்லாம் அவசர கருத்தடை மாத்திரைகள் மருந்தகத்திலேயே விற்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “Emergency Contraceptive Pills” என்று சொல்லுவார்கள்.இந்தியாவில் இந்த மாத்திரைகள் levonorgestrel 0.75 mg என்ற பெயரில் விற்கப் படுகிறது.
நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இந்த மாத்திரைகளை சாப்பிடலாம். சில மருந்துகள் உடலுறவுக்கு பின் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து சாப்பிட்டால் கூட கருப்பிடிக்க முடியாமல் செய்து விடும்.
ஒரு விடயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இந்த மாத்திரைகள் உடலுறவுக்குப் பின்னால் வேலை செய்தால் கூட, இவை உடலுறவுக்கு முன்னால் நீங்கள் உட்கொண்டால், வெகுவாகப் பயனளிக்கும். இதனால், நீங்கள் எப்போது உடலுறவு கொள்வீர்கள் என்று தெரியாத நிலையில் இருந்தால், இவற்றை நீங்கள் பையில் வைத்துக் கொள்ளலாம். உடலுறவு செய்யப் போகிறீர்கள் என்று தெரிந்தால், அவற்றை சட்டென்று உட்கொண்டு விடலாம்.
இந்த மாத்திரைகளில் (progestin and estrogen) போன்ற ஹார்மோன்கள் உள்ளன. அவை நீங்கள் கருப்பிடி க்க தேவையான உடல் நிலையை மாற்றி விடும். அதே போல இந்த மாத்திரைகள் எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்களிடம் இருந்து உங்களை பாதுகாக்காது. பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட பல பெண்களும் கருவடையாமல் இருக்க இதனை உட்கொள்கிறார்கள். இந்த மாத்திரையை சாப்பிட்ட சில மணி நேரத்தில் நீங்கள் வாந்தி எடுத்தால், இன்னொரு மாத்திரையை கூட சாப்பிட வேண்டும்.
பக்க விளைவுகள்:
* வயிற்று வலி
* மயக்கம்
* வாந்தி
* மார்ப்பகம் மென்மையாதல்
* மாதவிலக்கு தற்காலிகமாக தடைப்படுதல்
* பார்வை மங்கலடைதல்
* கை கால் குடைச்சல்
மேலே சொன்ன பக்க விளைவுகள் அதிகமாக இருந்தால், உடனே, மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இதே போல காப்பர்-டி என்ற பொருளை உள்ளே பொருத்தினாலும் பயனளிக்கும். இதுவும் உடலுறவுக்குப் பிறகு ஐந்து நாட்கள் வரை பயனளிக்கும்.
இன்னொரு விடயம். நீங்கள் முதல் முறை உடலுறவு கொள்வதால் கர்ப்பம் ஆக மாட்டீர்கள் என்று உங்கள் தோழிகள் சொன்னதாக சொன்னீர்கள். இது தவறான கருத்து. முதல் முறை உடலுறவு கொண்டாலும் கருப்பிடிக்க வாய்ப்பு உண்டு.
பின் குறிப்புகள்:
இந்த மாத்திரைகள் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் பயனளிக்கும். ஒரு வேளை, அடுத்த நான்கு வாரத்தில் மாத விலக்கு இல்லை என்றால், கர்ப்பத்துக்காக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இதே போல் இந்த மாத்திரைகள் அவசரத்துக்காக மட்டும் உபயோகப் படுத்துங்கள். மற்றபடி பாதுகாப்பான உடலுறவுக்கு, ஆணுறை போன்ற மற்ற கருத்தடை சாதங்களை பயன்படுத்துங்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad