இணையதளம் வாயிலாக ஐஸ் தீவிரவாதியை காதலித்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

ரஷ்ய மாணவி ஒருவர் ஜிகாதி காதலனை சந்திக்க வேண்டும் என்பதற்காக சிரியா செல்ல முற்படுகையில் அந்நாட்டு ரகசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த Varvara Karaulova (20) என்ற மாணவி தத்துவவியல் படிப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு இணையதளம் வாயிலாக ஐஸ் தீவிரவாதி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதை அடுத்து, அவரை சந்திப்பதற்காக 2 முறை சிரியாவுக்கு செல்ல முயற்சித்துள்ளார். இதில் 2வது முறை மாஸ்கோ விமான நிலையதில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டு, Lefortovo சிறையில் அடைக்கப்பட்டார். இப்பெண் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மாஸ்கோ நீதிமன்றத்திற்கு வந்தது.
நீதிமன்றத்தில் இப்பெண் கூறியதாவது, எனக்கு ஜிகாதியாக மாறவேண்டும் என்ற ஆசை கிடையாது. ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து தற்கொலைப்படைக்காக செயல்படவும் நான் விரும்பவில்லை. நான் காதலனை சந்திக்க வேண்டும், அது மட்டுமே எனது விருப்பம் நாங்கள் இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
இந்த மாணவியின் பெற்றோர் கூறியதாவது, எங்கள் மகள் மிகவும் புத்திசாலிப்பெண். 5 மொழிகளை சரளமாக பேசும் திறமை கொண்டவள். தற்போது அவள் இதுபோன்று ஒரு முடிவை எடுத்துள்ளதற்கு அவளது வயதுக்கோளாறே காரணம். இணையத்தை அதிகமாக பயன்படுத்தும் இவள், தன்னை அறியாமல் காதலில் விழுந்துவிட்டாள் என தெரிவித்துள்ளனர். இதுவரை, ரஷ்யாவை சேர்ந்த 15 மாணவிகள் ஐஎஸ் இயக்கத்தில் இணைவதற்காக சென்ற போது விமான நிலையத்தில் வைத்து பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad