இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா நகர் மீது ஏவுகணை தாக்குதல்!!

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு
இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது அண்டை நாடான யெமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.

யெமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை குறிவைத்து இன்று யெமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், மக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்த காணொளி..

Below Post Ad

Tags