தமிழகம் – திருச்சியில் 19 வயதுடைய இளம் பெண் ஒருவரை, தனது காதலன் கடத்தி சென்று தனது நண்பர்களுடன்
இணைந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடந்த வருடம் தாதியர் படிப்பை முடித்து விட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது செல்போனுக்கு தவறுதலாக அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய இளைஞர் ஒருவர் தனது பெயரை கூறி , திருச்சி செங்குறிச்சியில் வசித்து வருவதாக கூறியுள்ளார்.மேலும் தொடர்ந்து இளம் பெண்ணிடம் பேசி, இளைஞர் பேச்சில் இளம் பெண் மயங்கியுள்ளார்.
இதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறி இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.
இளம் பெண்ணிடம் பேசிய இளைஞர் உன்னை பார்க்க ஆசையாக உள்ளது. எனவே நேரில் வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து திருச்சியில் உள்ள ஒரு பகுதியில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் இளைஞர் குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதிக்கு சென்ற அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு இளம் பெண்ணை, இளைஞர் அழைத்து சென்றதனை அறிந்து இளம் பெண் அதிர்ச்சியடைந்து ஏன் இங்கு அழைத்து வந்துள்ளீர்கள் என்று தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு அவர் பேசத்தான் அழைத்து வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதனிடையே பெண்ணுக்கு தெரியாமல் இளைஞர் இதனது செல்போன் மூலம் அவரது நண்பர்கள் 3பேருக்கு தகவல் தெரிவித்து, தான் காதலியுடன் வந்திருப்பதாகவும், எனவே நீங்கள் இங்கே வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இளைஞரின் நண்பர்கள் அங்கு வரவே, அவர்களை பார்த்ததும் இளம் பெண் அதிர்ச்சியடைந்து ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்த அவர், அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் இளைஞர் பெண்ணை மடக்கி பிடித்து, நண்பர்கள் உதவியுடன் புதர் பகுதிக்கு தூக்கி சென்று பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மேலும் அவரது நண்பர்களும் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளனர்.
ஆனால் இளம் பெண் கூச்சல் இடவே, இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் பெண்ணை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அந்த வழியாக வந்த பொதுமக்கள், இளம் பெண்ணை மீட்டு திருச்சி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்ததனை தொடர்ந்து, இளம் பெண் சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவற்துறையிடனம் முறையிட்டுள்ளார்.
அதற்கமைய குறித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடும் பணியினை காவற்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.