பத்து நிமிடத்தில் உங்கள் முகம் ஒளிர வேண்டுமா?

நாம் அனைவருமே அழகான பொலிவான முகத்தை பெற விரும்புவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி முகத்திற்கு பயன்படுத்தி வருகின்றோம். நம் முகத்தின் அழகை நிரந்தரமாக எப்போதும் பொலிவாக வைத்துக் கொள்வதற்கு நம் வீட்டிலேயே உள்ளது சிறந்த பொருட்கள்.

பப்பாளி: பப்பாளி இயற்கையாகவே சிறந்த மருத்துவக் குணம் கொண்ட ஒரு பழ வகையாகும். எனவே தேவையான அளவு பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 1/2 டீஸ்பூன் சந்தனம், 4 துளி ரோஸ் வாட்டர், 1/4 டீஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை நம் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 30 நிமிடம் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் அகற்றப்பட்டு முகம் பொலிவாக இருக்கும்.

வாழைப்பழம்: வாழைப்பழம் நமது சருமத்தை மென்மையாக்கும் தன்மைக் கொண்டது. எனவே வாழப்பழத்தை அரைத்து, அதனுடன் 3/4 டீஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து நம் முகத்திற்கு பேஸ்பேக் போட்டு, 20 நிமிடம் கழித்து காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் நமது முகத்தின் கருமை நிறம் மாறி பிரகாசமாக இருக்கும்.

தக்காளி: தக்காளி நமது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் சருமத்தை நீக்கும் தன்மைக் கொண்டது. எனவே தக்காளிச் சாறுடன், சிறிதளவு சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும். பின் இதை நம்முடைய முகத்தில் தடவி, மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் எண்ணெய் சருமங்களை தடுத்து, பளபளப்பான சருமத்தின் அழககைத் தருகிறது.

தர்ப்பூசணி: தர்ப்பூசணி பழமானது, நமது சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகள் ஆகியவற்றை நீக்கி சருமத்தைப் பொலிவுறச் செய்கிறது. 2 டேபிள்ஸ்பூன் தர்ப்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் சாறு எடுத்துக் கொண்டு அதனுடன் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் பால் பவுடரைக் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து நீரில் கழுவினால், முகம் பளபளப்பாக இருக்கும்.

ஆப்பிள்: ஆப்பிள் பழத்தினை தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆப்பிள் பழத்தை பேஸ்ட் செய்து, அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, சூடான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் பளபளப்பாக இருக்கும்.

வெள்ளரிக்காய்: 1 டேபிள்ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதை காட்டன் பஞ்சைக் கொண்டு முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, சூடான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad