பெண்ணை கற்பழிக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து: கர்ப்பமானதால் தற்கொலை செய்த பரிதாபம்!

        பாகிஸ்தானில் குஜராத் நகரில் உள்ள தில்லு கர்பி என்ற ஒரு கிராமத்தில் பெண்ணை கற்பழிக்குமாறு பஞ்சாயத்தில் உத்தரவிட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனால் அந்த பெண் கர்ப்பமாகி தற்கொலை செய்துள்ளார்.

அந்த கிராமத்தில் ஒரு பெண் தன் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் தனது தந்தையுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணின் தந்தை அங்குள்ள ஒரு சிறுமியை கற்பழித்தாக பஞ்சாயத்து கூட்டப்பட்டது.

      அந்த பெண்ணின் தந்தை சிறுமியை கற்பழித்ததால் சிறுமியின் தந்தை அந்த பெண்ணை கற்பழிக்க வேண்டும் என உத்தரவிட்டது ஊர் பஞ்சாயத்து. இதனையடுத்து அந்த சிறுமியின் தந்தை அந்த பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளார்.

இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் கணவருக்கு அது அவமானமாக இருக்கும் என முடிவெடுத்து தற்கொலை செய்துள்ளார்.

உடலில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு வயிற்றில் குழந்தையுடன் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட அந்த பெண்ணிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் தந்தை, சிறுமியின் தந்தை, பஞ்சாயத்து தலைவர்கள் சிலர் என கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad