முதலிரவு அறையில் ஆசிட் பாட்டிலை மணப்பெண் மீது வீசி ..!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் ராணுவ வீரருக்கும், ராணுவத்தில் அதிகாரியாக இருக்கும் ஒருவருடைய மகளுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. அப்போது மணமகள் வீட்டில் முதலிரவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அதன்பிறகு மணமகள் முதலிரவு அறையில் தனியாக காத்திருந்தார்.

இந்த நிலையில் அப்போது அப்போது அறையை 2 பெண்கள் தட்டி உள்ளனர். உறவினர்கள்தான் கதவை தட்டுகிறார்கள் என்று மணமகள் கதவை திறந்துள்ளார். அப்போது அந்த பெண்கள் 2 பேரும் தன்னுடைய கையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை மணப்பெண் மீது வீசி விட்ட தப்பி ஓடி விட்டனர்.

ஆசிட் பட்டவுடன் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வலியால் அலறி துடித்தார். மணப்பெண் அலறிய சத்தத்தை கேட்டு வந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய பெண்களை தேடி வருகின்றனர். ஆசிட் வீச்சால் மணமகள் முகம், கண் ஆகியவவை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad