சில அப்பா மார்களின் துணிச்சலை பாராட்டாமல் இருக்கவே முடியாது. இங்கே பாருங்கள் தனது மகளை மட்டும் அல்ல, அவரது நண்பியையும் அப்பா காப்பாற்றியுள்ளார். குறித்த தந்தை ஒரு நிஞ்சா பாதுகாப்பு கலை நிபுணர் என்று கூறப்படுகிறது. தனது பிள்ளை இருக்கும் பக்கம் அவர் திரும்பும் வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் வருவதை அவதானித்த அவர். உடனே இரண்டு பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு பின் நோக்கி நகர்ந்துள்ளார்.