12 முறை கத்தியால் குத்திய மர்ம நபர் - வெளியாகிய அதிர்ச்சி காணொளி

பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவர் நடுரோட்டில் வைத்து இளைஞனை 12 முறை கத்தியால் குத்தி தப்பிச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மான்செஸ்டர் பகுதியில் உள்ள சாலையிலே இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்து வீடியோவில், இரண்டு நபர்கள் திடீரென நடுரோட்டில் சண்டையிடுகின்றனர். அதில், ஒருவன் தன் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்கிறான்.தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், அப்பகுதியில் இருந்து சிசிடிவி கமெராவில் பதிவான காட்சியை கைப்பற்றி வெளியிட்டுள்ளனர்.

மேலும், வீடியோவின் மூலம் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு தீவிரமாக தேடி வரும் பொலிசார், குற்றவாளி தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் உடனே தொடர்பு கொள்ளும் படி அறிவித்துள்ளனர்.இந்நிலையில், சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட 25 வயதான இளைஞனை கைது செய்த பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad