அமெரிக்க நாட்டில் 13 வயது மாணவனுடன் உறவுக்கொண்டு கர்ப்பிணியான ஆசிரியை ஒருவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த Alexandria Vera(25) என்ற இளம்பெண் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதே பள்ளியில் 13 வயது மாணவன் ஒருவன் பயின்று வந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவனுக்கும் ஆசிரியைக்கும் இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதில், இருவரும் அடிக்கடி காரில் வெளியே சுற்றியுள்ளனர்.
மேலும், மாணவனின் வீட்டிற்கு சென்ற ஆசிரியை அவனுடன் உடலுறவில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து 9 மாதங்கள் இருவரும் உடலுறவில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.இதனால் ஆசிரியை கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
கர்ப்பம் அடைந்ததை ஒப்புக்கொண்ட ஆசிரியை ‘தாங்கள் இருவரும் மனதார காதலிக்கிறோம்’என கூறினார். ஆனால், வயது குறைவான சிறுவனுடன் ஆசிரியை உடலுறவில் ஈடுப்பட்டது சட்டப்படி குற்றம் என்பதால், கருவை கலைத்துள்ள ஆசிரியை நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், ஆசிரியை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.