130 மனைவிகள், 203 குழந்தைகளுடன் வாழ்ந்த இஸ்லாமிய மதகுருவிற்கு நேர்ந்த கதி

நைஜீரியாவில் 130 மனைவிகள் மற்றும் 203 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த முன்னாள் இஸ்லாமிய மதகுரு பாபா மசபா என்றழைக்கப்படும்  முகமது பெல்லோ அபூபக்கரின் 93 வயதில் உயிரிழந்துள்ளார்.

நோயால் அவதிப்பட்டு வந்த பாபா மசபா  மத்திய நைஜர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மதகுரு 130 மனைவிகளும், 203 குழந்தைகளையும் வாழ்ந்து வந்துள்ளதோடு, அவரது மனைவிகளில் சிலர் தற்போதும் கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதகுருவாக திகழந்து வந்த பாபா மசபா தன்னிடம் உதவி கேட்டு வருகின்ற பெண்களிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து, பின்னர், அவர்கள் விருப்பத்துடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்




Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad