10000 மேற்பட்ட இலங்கை யுவதிகள் காதலர்தினத்தில் உடலுறவால் கன்னித் தன்மை இழந்தனர்

இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர். அத்துடன் அத்தினத்தில் 4500 ரூபாவுக்குட்பட்ட அறைகளில் 80 சதவீதம் காதல் ஜோடிகளுக்காக முன்பதிவு செய்துகொள்ளப்படுவதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.

‘ஸ்கொட்டிஷோர்பிட்’ நிறுவனம் காதலர் தினப்பரிசுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், கருக்கலைப்பு நிலையம் மற்றும் வைத்திய நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய ஆய்வின் மூலமே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காதலர் தினம் கொண்டாடப்படும் பெப்ரவரி 14 ஆம் திகதியில் குடும்பக் கட்டுப்பாட்டு சாதனங்களின் விற்பனை இரு மடங்காக அதிகரிக்கிறது. மேலும் காதலர் தினத்தை அடுத்து வரும் 15, 16, 17 ஆம் திகதிகளில் ஏராளமான யுவதிகள் கருக்கலைப்பு செய்துகொள்வதற்காக கருக்கலைப்பு நிலையங்களுக்குச் செல்வதாகவும் தெரிய வருகிறது.

மேலும் காதலர் தினத்தில் காதலர்களுக்கிடையில் பரிமாறிக்கொள்ளும் சிறந்த பரிசு பாலியல் ரீதியிலான உறவு என்ற எண்ணக்கருவை தற்கால இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் பரப்பி வருகின்றன.

எனவே அதனால் பாடசாலை மாணவிகள் உட்பட ஏராளமான யுவதிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ஆகவே காதலர் தினத்துக்கு அடுத்து வரும் நாட்களில் யுவதிகளின் தற்கொலை வீதம் வழமையை விட இரட்டிப்பாவதாகவும் அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad