மட்டக்களப்பில் 14 வயது மாணவி துாக்கில் தொங்கியது ஏன்?

மட்­டக்­க­ளப்பு, களு­வாஞ்­சிக்­­குடி பொலிஸ்­பி­ரி­விற்­குட்­பட்ட களு­தா­வளை பகு­தியில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்­கிய நிலையில் உயி­ரி­ழந் துள்ளார்.களு­தா­வளை, எல்­லை­வீதி எனும் முக­வ­ரியில் வசிக்கும் மனே­கரன் ஹலுக்­சனா (வயது 14) என்ற மாண­வியே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

நேற்று வெள்­ளிக்­கி­ழமை தனது வீட்டில் அறையில் தூக்கில் தொங்கி இவர் தற்­கொ­லைக்கு முயற்­சித்த சமயம் அவரை மீட்டு குடும்­பத்­தினர் இவரை களு­வாஞ்­சி­குடி ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­சென்­றுள்­ளனர். இந்த நிலையில் குறித்த மாணவி ஏற்­க­னவே உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக வைத்­தி­ய­சா­லையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணையை களு­வாஞ்­சி­குடி பொலி­ஸாரும் மட்­டக்­க­ளப்பு தட­வியல் பிரிவு பொலி­ஸாரும் இணைந்து மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர்.

குறித்த மாண­வியின் சடலம் களு­வாஞ்­சி­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் பிரேத பரி­சோ­தனை மேற்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad