வவுனியாவில் விபத்தில் சிக்கி பலியாகும் பெண்கள்! மீண்டும் ஒரு33 வயதுப் பெண் பலி

இன்று மாலை, வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெரியமடுவை சேர்ந்த 33 வயதுடைய யோகேஸ்வரன் ஜெனனி என்ற பெண் பலியாகியுள்ளார்.


குறித்த பெண் மூன்று பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. பன்றிக்கெய்தகுளம் பாடசாலையில் இருந்து அயல் வீட்டில் வசிக்கும் உறவினரின் பிள்ளையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தபோதே எதிரில் வந்த பிக்கப் வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் அவர் பலியாகியுள்ளார். இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவருடைய உறவினரான 22 வயதுடைய பெண்ணும் அவருடைய 8 மகனும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad