ஆளுநரிடம் பன்னீர்செல்வம் வைத்த 5 கோரிக்கைகள்?

தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில், வாழ்வா? சாவா? போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் சசிகலாவும், பன்னீர் செல்வமும்...

முதல்வர் பொறுப்பை இராஜினாமா செய்த ஓ.பி.எஸ், அதை வாபஸ் பெற்று, மீண்டும் அந்த இடத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார்.

128 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வைத்திருக்கும் சசிகலா முதல்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிடப் போராடிக் கொண்டிருக்கிறார்.

யாருக்கு வெற்றி என்பது தற்காலிகமாக ஆளுநரின் கையில்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட ‘இருதலைக்கொள்ளி’ நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஓ.பி.எஸ், வி.கே.எஸ் என இருவருக்கும் ஒரே நாளில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார்.

9-ம் தேதி மாலை 5 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கப்போன ஓ.பி.எஸ் 5 கோரிக்கைகள், 6 கோப்புகளை தன்னுடன் எடுத்துப்போனார்.

ஆளுநரிடம் ஓ.பி.எஸ் வைத்த 5 கோரிக்கைகள்!

1. ராஜினாமா செய்ததை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.

2. சசிகலாவை சட்டமன்ற ஆளும் கட்சித் தலைவராக நியமித்ததை ஏற்கக்கூடாது. ஏனென்றால், அதில் முறைகேடுகள் நடந்துள்ளன.

3. சசிகலா ஆளும் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து அவரை வாபஸ் பெற வலியுறுத்த வேண்டும்.

4. சசிகலாவுக்கு இருக்கும் மெஜாரிட்டி என்பது முறைகேடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

5. சசிகலாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது.

ஆளுநரிடம் ஓ.பி.எஸ் கொடுத்த 6 கோப்புகள்!

1. தான் ராஜினாமா செய்தததை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்பதற்கான கடிதம்.

2. போயஸ் கார்டன், வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவது.

3. சென்னை கமிஷனர் ஜார்ஜ் மாற்றம் தொடர்பான உத்தரவு.

4. எல்.எல்.ஏ-க்கள் கடத்தப்பட்டுள்ளதாக 4 எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த புகார் நகல்.

5. சசிகலா பொதுச்செயலாளர் ஆனதில் விதிமுறை மீறப்பட்டதற்கான ஆதாரமாக அ.தி.மு.க பை-லா.

6. தனக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்பதை நிருபிக்க அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதற்கான அனுமதி கேட்கும் கடிதம்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad