ஜேர்மனில் 60 வயது மூதாட்டிக்கு 20 வயது இளைஞன் செய்த கொடுமை!

ஜேர்மனியில் 60 வயதான மூதாட்டியை கற்பழித்த இளைஞனை பொலிசார் தேடி வருகிறார்கள். ஜேர்மனியின் Thuringia நகரில் வசித்து வரும் 60 வயது மூதாட்டி தன் வீட்டை விட்டு அதிகாலை 6 மணியளவில் வெளியில் சென்றுள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு கார் வந்தது, காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த 20 வயது இளைஞன் அந்த மூதாட்டியை காரின் உள்ளே வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளான். அவர் காரை நிறுத்த சொல்லியும் அதன் ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றுள்ளார். மிருகத்தனமாக மூதாட்டியை அடித்த அந்த இளைஞன் பின்னர் அவரை கற்பழித்துள்ளான்.

 பின்னர் கடும் முயற்சிக்கு பிறகு அந்த பெண் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தன்னிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞன் ஜேர்மன் மொழியை திக்கி திணறி பேசியுள்ளதாகவும், அவன் உடை நிறம் பற்றிய அடையாளங்களையும் அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார் இதை வைத்து இளைஞன் வேறு நாட்டை சேர்ந்தவனாக இருக்ககூடும் என தெரிவித்துள்ள பொலிசார் அவனையும் அவனுடன் இருந்த கார் ஓட்டுனரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad