செயற்கைகோளில் அகப்படாத ஏவுகணையை பரிசோதித்த வட கொரியா: அதிர்சியில் அமெரிக்கா

உளவுபார்க்கும் சாட்டலைட்டில் அகப்படாத மற்றும் அணு குண்டை ஏந்தி கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை ஒன்றை வடகொரியா பரீட்சித்துப் பார்த்ததால். அமெரிக்க ஜப்பான் உட்பட ஐரோப்பிய நாடுகளும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. பொதுவாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் பல வேவு பார்க்கும் சாட்டலைட்டுகளை விண்ணில் ஏவுயுள்ளது. ஆனால் அவற்றின் கண்களில் மண்ணை தூவக்கூடிய  ஏவுகணை இது என்றும்.

உளவு பார்க்கும் சாட்டலைட்டால் அதனை கண்காணிக்க முடியாது என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது. இதில் உண்மை உள்ளது. ஏன் எனில் அவர்கள் ஏவுகணையை பரிசோதனை செய்த பின்னரே பல நாடுகளுக்கு அவர்கள் பரிசோதனை நிகழ்த்திய விடையம் தெரியவந்துள்ளது. பொதுவாக அணு குண்டில் புளூட்டோனியம் என்னும் கதிரியக்க பொருளை பாவிப்பார்கள். அது மிகையாக செறிவூட்டப்பட்டு இருக்கும்.

இதனால் அதில் இருந்து குறிப்பிடத்தக்க கதிர்வீச்சு காணப்படும். இதனை தடுப்பது என்பது இயலாத காரியம். இந்த கதிர்வீச்சை வைத்தே விண்ணில் உள்ள சாட்டலைட்டுகள், பூமியில் எங்கே எல்லாம் அணு ஆயுத நடமாட்டம் உள்ளது என்று கண்காணிக்கும். ஆனால் தற்போது வடகொரியா செய்துள்ள ஏவுகணையில் இருந்து எந்த கதிரியக்க கசிவும் இல்லை. இதனால் அதனை கண்டுபிடிப்பது என்பது பெரிய விடையமாக உள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.







Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad