திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கடந்த 10 வருடங்களாக மதுரை மாவட்டம் மேலூரில் வசித்து வருகிறார். இவரது மகள் தர்ஷினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் (பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவர் வத்தலக்குண்டு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
தர்ஷினி தனது தந்தையுடன் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு செல்லும் போது சுந்தர் பழக்கமாயிருக்கிறார். பின்னர் மேலூருக்கு வந்த பிறகும் போன் மூலம் பேச தொடங்கியிருக்கிறார்கள்.
தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியிருக்கிறார்கள். இப்படியே நாட்கள் பல கடந்தது. இந்நிலையில் திடீரென தர்ஷினிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
தர்ஷினியும் வீட்டில் இருந்த நெருக்கடிக்கு பயந்து தன் காதலை சொல்லாமல் மறைத்து விட்டார். இதனிடையே வேறு ஒரு மாப்பிள்ளையுடன் தர்ஷினிக்கு நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்திருக்கிறது.
ஒருவரை காதலித்து விட்டு இன்னொருவருடன் வாழ்வதா என்று எண்ணிய தர்ஷினி போன் மூலம் காதலன் சுந்தரிடம் தனது நிலைமையை சொல்லி அழுதிருக்கிறார். எப்படியும் காதலியை கரம் பிடிக்க வேண்டும் என்று எண்ணிய சுந்தர், அதற்காக திட்டமிட்டிருக்கிறார்.
மேலும் கல்யாணத்திற்காக மணப்பெண் வீட்டார் ஒரு வாரமாக திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் தங்கியிருந்திருக்கிறார்கள். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சுந்தர், தர்ஷினியை வெளியே வரவழைத்திருக்கிறார்.
யாருக்கும் தெரியாமல் தன் காதலி தர்ஷினியை பழனிக்கு அழைத்துச் சென்று கல்யாணம் செய்திருக்கிறார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வந்து ஆஜராகியிருக்கிறார்கள்.
இந்நிலையில் தர்ஷினியை காணாமல், கல்யாண மண்டபமே பரபரப்பானது. கல்யாணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எங்கு தேடியும் தர்ஷினி கிடைக்கவில்லை. பின் கோர்ட்டில் இருக்கும் விபரம் தெரிந்து தர்ஷினியின் பெற்றோர் உறவினர்களுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
தர்ஷினியின் உறவினர்கள் சுந்தரை தாக்கியிருக்கின்றனர். ஆனால் தர்ஷினி வர மறுத்திருக்கிறார். அவரை அடித்து இழுத்து சென்றிருக்கிறார்கள். இந்த காதல் சம்பவத்தால் திண்டுக்கல் கோர்ட்டில் 1 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்