ஜேர்மனி பணயகைதி தலையை துண்டித்து வீடியோவாக வெளியிட்டது ஐஎஸ்

ஜேர்மனி பணயகைதி தலையை துண்டித்து கொலை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து ஐஎஸ் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த 70 வயதான ஜூர்கன் கான்ட்னர் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐஎஸ்யுடன் தொடர்புடைய அபு சயீப் என்ற பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.

அவரை விடுவிக்க வேண்டுமானால் 6 லட்சம் அமெரிக்க டாலர் (இலங்கை மதிப்பில் 8 கோடி) வழங்கவேண்டும் என்று பயங்கரவாதிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஜூர்கன் கான்ட்னரை விடுவிப்பது தொடர்பாக பயங்கரவாத குழுவினருடன் பிலிப்பைன்ஸ் அரசின் தூதர் ஜீசஸ் துரேஸா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், பணய கைதி ஜூர்கன் கான்ட்ஸாவை பயங்கரவாதிகள் தலையை துண்டித்து கொன்றுவிட்ட தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பான வீடியோ படத்தையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர். இந்த தகவலை பிலிப்பைன்ஸ் அரசின் தூதர் ஜீசஸ் துரேஸா உறுதிப்படுத்தி இருக்கிறார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad