இந்தியாவுடன் உடன்படிக்கையினை ஏற்படுத்தும் நிர்பந்தம் தமக்கு ஏற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தெரிவித்திருந்ததாக இந்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தினை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்பதற்கு இரண்டு தடவைகள் இராணுவத்தினர் மறுப்பு தெரிவித்ததை அடுத்தே இந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டதாக இரகசிய ஆவணம் ஒன்றை அடிப்படையாக கொண்டு தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் இந்திய அமைதிகாக்கும் படையினர் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகவும், இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரியான பீற்றர் கல்பிரித்திடம் யாழ்ப்பாணத்தினை மீட்குமாறு தமது படையினர் இரண்டு தடவைகள் கூறியதாக ஜே.ஆர் கூறினார்.
1987ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் 1200 இந்திய படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
பின்னர், 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் உடன்படிக்கை செய்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகளை கொலை செய்ததாக குற்றச்சாட்டும் காணப்பட்டது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன ராஜீவ் காந்தி ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரங்களை பகிரவும் தமிழை அரச கருமை மொழியாக அங்கிகரிப்பதாகவும் வழங்கிய உறுதி மொழிக்கமைய இந்திய படையினர் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.
1988ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் விட்டுக்கொடுப்பற்ற பேச்சு குறித்து விமர்ச்சித்த ஜே.ஆர், "பிரபாகரன் ஒரு முட்டாள்" எனவும் கூறியதாக அமரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.எ சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் ஜே.ஆர்க்கு வேறு உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையிலேயே இந்தியாவுடன் உடன்படிக்கையை மேற்கொண்டிருந்ததாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தேர்தல்களை நடத்த உள்ளதாக ஜே.ஆர் அமெரிக்க இராஜதந்திரியிடம் கூறியுள்ளதாகவும், பின்னர் 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் இடம்பெற்றது என்றும் அமெரிக்க இராஜதந்திரியிடம் ஜே.ஆர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும், இலங்கை இராணுவத்திற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்பட்டதாகவும் அமெரிக்க இராஜதந்திரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.