நெய்மரின் ரசிகர்களை கிறங்கடித்த இளம்பெண்!

பிரேசில் கால்பந்து அணியின் இளம் வீரரான நெய்மருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ரொனால்டோ, மெஸ்ஸி வரிசையில் இவரும் உலகின் சிறந்த கால்பந்து வீரராக உள்ளார்.

இந்நிலையில் இவருக்கு ரபெல்லா என்ற ஒரு சகோதரி உள்ளார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர்.

ரபெல்லாவின் படத்தை நெய்மர் தனது வலது கையில் பச்சை குத்தியுள்ளார். அதேபோல் நெய்மரின் கண்களை ரபெல்லா தனது கையில் பச்சை குத்தியுள்ளார்.

இவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமூகவலைதளங்களில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad