யாழில் விபத்து..! உயிர் தப்பிய கர்ப்பிணி பெண்

யாழ். குளப்பிட்டி சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெப்ரக வாகனம், முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது முச்சக்கர வண்டியில் பயணித்த கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து, காங்கேசன்துறை வீதிவழியாக சென்று கொண்டிருந்த வேன் ஒன்று குளப்பிட்டி சந்தியால் ஆனைக்கோட்டை பக்கமாக திரும்பியுள்ளது.

இதன் போது பின்னால் வந்த முச்சக்கர வண்டி வேன் திரும்பிச் செல்லும் வரையில் வீதியில் நின்றுள்ளது. எனினும், முச்சக்கர வண்டிக்கு பின்னால் வேகமாக வந்த கெப்ரக வாகனம் முச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.

இதனையடுத்து, குறித்த முச்சக்கவண்டியின் முன்னால் இருந்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad