காதலனை கொன்று பல மாதங்கள் பிணத்துடன் வாழ்ந்த பெண்! காரணம் என்ன?

ஸ்பெயினில் பெண் ஒருவர் தனது காதலனை கொன்று பல மாதங்களாக பிணத்துடன் வாழ்ந்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. Andalusia, Cordoba நகரில் உள்ள ஒரு வீட்டிலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.


இக்குற்றச் செயலலில் ஈடுபட்ட 40 வயதான Baena என்ற பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். கைதான Baena கூறியதாவது, என் காதலன் 51 வயதான Manolo என்னை வீட்டில் அடைத்து தினமும் ஐந்து முறை கற்பழித்தும், பாலியல் ரீதியாக கொடூரமாக துன்புறுத்தினார். அதுமட்டுமின்றி தினமும் கொடூரமாக தாக்குவார். தினமும் பொறுமையை கடைபிடித்து வந்த நான், கடந்த அக்டோபர் மாதம் சம்பவத்தன்று மிகவும் கோபமடைந்தேன்.


எதிர்வரும் காலத்தில் நிம்மதியாக சுதந்திரமாக வாழ வேண்டும் என கத்தியை எடுத்து அவரை குத்தி கொன்றேன். பின்னர், பிணத்தை வீட்டிலேயே வைத்து வாழ்ந்து வந்தேன். சம்பவம் குறித்து பொலிசார் கூறியதாவது, காணாமல் போன நபர் குறித்து விசாரிக்க காதலிக்கு வீட்டிற்கு சென்றோம். வீட்டில் நுழைந்தவுடன் Baena குற்றத்தை ஒப்புக்கொண்டு அழுக ஆரம்பித்தார். தற்போது, கைது செய்யப்பட்டுள்ள Baena விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad