கோப்பாய் பொலிஸால் தொல்லை! கள்ளக்காதலி வீ்ட்டில் துாக்கில் தொங்கிய வர்த்தகர்

கோப்பாய் பொலிசாரின் தொடர்ச்சியான தொல்லை காரணமாக தனது கள்ளக்காதலி வீட்டில் துாக்கில் தொங்கியுள்ளார் வர்த்தகர் ஒருவர். கல்வியங்காட்டுப் பகுதியில் வர்த்தகராக உள்ள குறித்த நபர் ஒருவருக்கும்நல்லுார் கோவில் வீதிப் பகுதியில் உள்ள குடும்பப் பெண் ஒருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணின் கணவரும் கணவரது நண்பர்களுமாக குறித்த வர்த்தகரை தாக்கியதாகவும் அதன் பின்னர் அப் பெண்ணுடனான உறவை குறித்த வர்த்தகர் நிறுத்திவிட்டதாகவும் தெரியவருகின்றது.

இந் நிலையில் கடந்த சில நாட்களாக குறித்த வர்த்தகருக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டதால், இது தொடர்பாக குறித்த வர்த்தகர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்ட பொலிசார் பின்னர் அது தொடர்பா குறித்த வர்த்தகருக்கு தெரிவித்து ‘இனிமேல் அவர்கள் கொலை அச்சுறுத்தல் விடமாட்டார்கள், குறித்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு‘ கேட்டுள்ளனர். அதற்கு அந்த வர்த்தகர் மறுத்துள்ளார். இதனால் கோப்பாய் பொலிசாருக்கும் வர்த்தகருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பல தடவைகள் கோப்பாய் பொலிசார் வர்த்தகரது கடைக்குச் சென்று வர்த்தகரை அச்சுறுத்தியதாக வர்த்தகர் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் இன்று நண்பகல் அளவில் கோப்பாய் பொலிசார் கல்வியங்காட்டில் உள்ள வர்த்கரின் கடைக்குச் சென்று அவருடன் கதைக்க முற்பட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த குறித்த வர்த்தகர் தனது கள்ளக்காதலியான குடும்பப் பெண்ணாலேயே இந் நிலை ஏற்பட்டது என கூறி அவரது நல்லுார்ப் பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்று வீட்டு முற்றத்தில் இருந்த மாமரத்தில் ஏறி கழுத்தில் சுருக்கிட்டு குதித்துள்ளார்.

குறித்த வீட்டுக்கு அருகில் மேசன் வேலை செய்து கொண்டிருந்த சிலர் இதனைக் கண்டு உடனடியாக ஓடிச் சென்று வர்த்தகரை அரை உயிரில் காப்பாற்றி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த வர்த்தகர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது...
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad