கார் முழுவதும் பணத்தை ஒட்டி காதல் பரிசு கொடுக்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்தகதி..!

காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலை நிரூபிப்பதற்காக காதலிக்கு 2000 ரூபா நாணயத்தாள்களை கார் முழுவதும் ஒட்டி, பரிசு கொடுக்கச் சென்ற காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரிலுள்ள இளைஞன் ஒருவர், தனது காதலிக்கு பரிசளிக்க காரின் வெளிப்பகுதியில், புதிய 2000 ரூபாய் நாணயத்தாள்களை அலங்கரித்து வீதியில் ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தை கண்ட பொதுமக்களும், பொலிஸாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குறித்த காரை பின் தொடர்ந்த பொலிஸார், காரை கைப்பற்றியதோடு,  குறித்த இளைஞனை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad