படிக்க வந்த இடத்தில் இளம்பெண் பாலியல் தொழில்: மரணத்தில் முடிந்த பரிதாபம்!

பெங்களூரில் உகாண்டா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படிக்க வந்துள்ளார். அவர் படிக்க வந்த இடத்தில் பாலியல் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதில் ஏற்பட்ட பிரச்சனையில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார்.

உகாண்டா நாட்டை சேர்ந்த ஃப்ளோரன்ஸ் நகயாகி படிப்பதற்காக இந்தியா வந்தார். பெங்களூரில் தங்கி படித்துவந்த அவர் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த இஷான் என்பவரும் எம்.டெக் முடித்து விட்டு வேலை தேடி பெங்களூரு வந்துள்ளார். இஷான் ஃப்ளோரன்சை சந்தித்து அவருக்கு 5000 ரூபாய் தருவதாக கூறி அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது ஃப்ளோரன்சை சந்திக்க வேறொரு நபரும் வந்துள்ளார். இதனையடுத்து இஷாந்திடம் இருமடங்கு பணம் வழங்குமாறு கூறியுள்ளார் ஃப்ளோரன்ஸ். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் ஃப்ளோரன்ஸ் இஷானை கத்தியால் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த இஷான் அந்த கத்தியால் ஃப்ளோரன்சை குத்தி கொலை செய்தார். இதனையடுத்து அங்கிருந்த உகாண்டா மாணவர்கள் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இஷானை கைது செய்தனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad