கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை -தங்கை போலீசில் புகார்

பூந்தமல்லி திருமால்நகர் பகுதியில் வசிப்பவர் மலைராஜா (வயது 35). ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் டெலிவரி செய்பவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமா(32). இவர்களுக்கு சாருஹாசினி(6), சாருரேகா (4) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்போது ஹேமா மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இவர்களது சொந்த ஊர் சிதம்பரம் ஆகும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மலைராஜா வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஹேமா, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

அதிர்ச்சி அடைந்த மலைராஜா, உடனே அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே உடலில் தீக்காயங்களுடன் இருந்த ஹேமாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஹேமா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே ஹேமாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது தங்கை சுகந்தி பூந்தமல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரிலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad