பிரான்ஸ் நகரில் வெடித்தது கலவரம்: கட்டுப்படுத்த முடியாமல் திணறும் காவல்த்துறை

காவல்துறையினருக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைதிப்பேரணி ஒன்று கலவரமாக உருமாறியதை அடுத்து வன்முறையாளர்களை அடக்கும் முயற்சியில் பொலிசார் களமிறங்கியுள்ளனர்.

பாரிசில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக அமைதிப்பேரணி ஒன்று நடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட ஒரு சிலர் திடீரென்று வன்முறையில் இறங்கி வாகனங்களை கொளுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் Bobigny பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கலவரக்காரர்களை அடக்கும் பொருட்டு பொலிசார் கண்ணீர் குண்டுகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று Aulnay-sous-Bois பகுதியில் உள்ள 3000 estate அருகே 22 வயதான Theo Temoigne என்ற இளஞனை 4 பொலிசார் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அந்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியை கற்பழிப்பு வழக்கில் குற்றம் சுமத்தியுள்ளனர்.


இதேவேளை 3 அதிகாரிகள் மீது கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

பொலிஸ் தரப்பில் இது எதிர்பாரத வகையில் நடந்த சம்பவம் என கூறப்பட்டபோதும், பாதிக்கப்பட்ட நபர் தனியார் செய்தி ஊடகத்தில் தமக்கு நேர்ந்த பாதிப்பை வெளிப்படையாக தெரிவித்துள்ளதால், பாரிசின் பல பகுதிகளில் பொதுமக்கள் கலவரத்தில் குதித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையே பொதுமக்களை சீரழிப்பது எந்தவகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்ட 17 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் பாடசாலை ஒன்றும் கார் ஷோரூம் ஒன்றையும் நெருப்பு வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Nantes பகுதியில் 400 பேர் கலந்து கொண்ட பேரணி ஒன்றில் அத்துமீறிய பொலிசார் 20 பேரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே காவல்துறை விசாரணை நடத்தும் பொருட்டு பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என பாதிப்புக்குள்ளான Temoigne கோரிக்கை வைத்துள்ளார். இதை பிரான்ஸ் ஜனாதிபதி வரவேற்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.










Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad