கருகலைப்பு செய்யப்பட்ட 19 பெண் சிசுக்களின் சடலம் குப்பை மேட்டில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் மராட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது. மராட்டிய மாநிலம் சாங்லியில் குப்பைத் தொட்டியில் கருகலைப்பு செய்யப்பட்டு கொல்லப்பட்ட 19 பெண் சிசுக்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குப்பைத் தொட்டியில் இருந்து பெண் சிசுக்களின் சடலங்கள் எடுக்கப்பட்டதையடுத்து பெண் சிசுக்கள் கொல்லப்படும் மோசடியை பொலிஸார் வெளிக்கொண்டு வந்துள்ளனர். தனியார் வைத்தியசாலையில் கருகலைப்பு செய்துக் கொண்ட பெண் உயிரிழந்த சம்பவத்தினையடுத்து விசாரணையில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.
மிராஜில் வைத்தியர் பாபாஷாகிப் கித்ராபுரேவினால் நடத்தப்படும் வைத்தியசாலையில் கருகலைப்பின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். 26 வயது கர்ப்பிணி பெண்ணின் தந்தை சுனில் ஜாதவ் கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். தன்னுடைய மருமகன் மற்றும் வைத்தியருக்கு எதிராக அவர் முறைப்பாடு செய்திருந்திருந்தார். விசாரணையின் போது பொலிஸார் மாய்சால் கிராமத்தில் குப்பையை கொட்டும் பகுதிக்கு சென்று நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட 19 பெண் சிசுக்களின் சடலங்கள் ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டன.
மகராஷ்டிரா டைம்ஸ் தகவலின்படி குற்றவாளி கித்ராபுரே ஓமியோபதியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர் என தெரியவந்துள்ளது. கித்ராபுரே கடந்த 10 ஆண்டுகளாக பெண் குழந்தைகளை கருகலைப்பு செய்து வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. சாங்லி மாவட்ட பொலிஸ் அதிகாரி தத்தார்யா ஷிண்டே கருத்து தெரிவிக்கையில்,
“இந்த பெண் சிசுக்கள் கருகலைப்பு செய்யப்பட்டுள்ளன. சடலங்கள் குப்பை கிடங்களில் புதைக்கப்பட்டுள்ளது. சில சிசுக்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. எலும்புகள் மற்றும் சதைகள் பிளாஸ்டிக் பேக்கில் இருந்தது,” என கூறிஉள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மூன்றாவது முறையாக கருவுற்று இருந்த போதும் பெண் குழந்தை என தெரியவந்துள்ளது, இதனால் அவருடைய கணவர் பிரவின் ஜாம்தேடா வைத்தியசாலைக்கு கருகலைப்புக்கு அழைத்து சென்று உள்ளார்.
கருகலைப்பின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்துவிட்டார். கித்ராபுரே பெண்ணின் நிலை மோசமாக உள்ளது, சிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளார், ஆனால் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மறைக்கும் விதமாக பிரவின் ஜாம்தேடா மனைவிக்கு இறுதி சடங்குகளை செய்துள்ளார், ஆனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் மார்ச் மூன்றாம் திகதி, அவருடைய பெற்றோர்கள் பிரவின் ஜாம்தேடா வீட்டின் முன்னதாகவே சடலத்தை தகனம் செய்து உள்ளனர். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரவின் ஜாம்தேடாவும், பாபாஷாகிப் கித்ராபுரேவும் தப்பிவிட்டனர். அவர்களுக்கு பொலிஸ் வலைவீசி வருகிறது. பெண் குழந்தைகள் மீதான வன்முறை, கொடூரம் ஒவ்வொரு நிலையிலும் இன்னும் தொடர்ந்து கொண்டு வருகிறது.