36 விமானங்களில் சவூதி மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்..! வாழ்ந்த இப்படி வாழனும்

சவூதி அரேபிய மன்னர் சல்மான்பின் அப்துல் அஜீஸ் 50 வருடங்களுக்கு பிறகு இந்தோனேசியாவிற்கு 1500 பேர்களுடன் 36 விமானங்களின் சேவைகளுடன் ஆடம்பர சுற்று பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தோனேசியாவிற்கு 9 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள மன்னர் சல்மான், பயன்படுத்து வதற்கு தேவையான பொருட்கள் 460 டன், 800 பிரதிநிதிகள், இரண்டு பென்ஸ் சொகுசு கார்கள் மற்றும் 572 பணியாட்கள் என அனைத்தும் 36 விமானங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.

மன்னரின் விஜயத்திற்கு மூன்று நாட்களுக்கு முதலில் இருந்தே அவருக்கான பொருட்கள் மற்றும் பணியாளர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, தலைநகர் ஜகர்த்தாவிலுள்ள மூன்று அதிசொகுசு நட்சத்திர விடுதிகள் தங்குவதற்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன. உலகில் முஸ்லிம்கள் அதிகமுள்ள நாடான இந்தோனேசியாவில் சுற்று பயணத்தை முடித்தப்பிறகு, மன்னர் சல்மான் மலேசியா, சீனா, மாலைத்தீவு மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad