தூம் பட ஸ்டைலில் 60 கோடி பெறுமதியான தங்கநாணயம் திருட்டு.

பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ எடையுடைய தங்க நாணயத்தை கொள்ளையிட்டுள்ள சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனி தலைநகர் பெர்லினிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 100 கிலோ எடையுள்ள தங்க நாணயத்தை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளதாகவும், குறித்த நாணயத்தின் பெறுமதி சுமார் 60 கோடிக்கு மேலிருக்குமென அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் குறித்த தங்க நாணயம், நேற்று முன்தினம் இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், கனடா அரசால் கடந்த 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நாணயமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு திருடப்பட்டுள்ள நாணயத்தில் பிரித்தானிய ராணி 2 ஆவது எலிசபெத்தின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளதோடு, முழுமையாக தங்கத்தால் உருவாக்கப்பட்டிருந்ததனால், குறித்த நாணய வடிவமைப்பானது உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பெர்லின் அருங்காட்சியகத்தில், உலக நாடுகளின் சுமார் 5 இலட்சத்து 40 ஆயிரம் நாணயங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad