உலகின் மாபெரும் மனிதப் புதைகுழி! போதைப்பொருள் கடத்துபவர்களின் சாம்ராஜ்யம்!

மெக்ஸிக்கோவில், போதைப்பொருள் கடத்தல்காரர்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் பாரிய மனிதப் புதைகுழியொன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கு, போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கொன்று புதைக்கப்பட்டதாக நம்பப்படும் சுமார் 250க்கும் மேற்பட்டவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போனவர்களைக் கண்டறியும் நோக்கில் சமூகச் செயற்பாட்டாளர்களின் முயற்சியின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்திலாந்திக் கடலையொட்டிய மெக்ஸிக்கோவின் பிரதான துறைமுக நகரான வெராக்ரூஸ் என்ற இடத்திலேயே இந்தப் பாரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 250 பேரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன், தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகத் தொடர்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது மெக்ஸிக்கோவின் மட்டுமன்றி உலகின் மிகப் பெரிய மனிதப் புதைகுழியாகக் குறிப்பிடப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad