தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் முட்டை..! அச்சத்தில் பொதுமக்கள்..!

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனையாகி வருகிறது. இதனை கண்டுப்பிடிப்பதும் மிகவும் சிரமம்.

இந்த நிலையில் இன்று காங்கயம் அருகே பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவது தெரியவந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் சென்னிமலை சாலை சாவடி கிராமத்தில் உள்ள மளிகை கடையில் பெரியசாமி என்பவர் நேற்று முட்டை வாங்கியுள்ளார்.

அந்த முட்டையை வீட்டிற்கு கொண்டு சென்று ஆப்பாயில் போட தோசை கல்லில் உடைத்து ஊற்றியுள்ளார். அப்போது முட்டை சரியாக வேகாமல் பிளாஸ்டிக் பேப்பர் போன்று படலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கடைக்காரரிடம் பெரியசாமி முறையிட்டுள்ளார்.  அப்போது, கடைக்காரர் தான் சென்னிமலையில் இருந்து மொத்தமாக முட்டை வாங்கியதாகவும்,

இதில் பிளாஸ்டிக் முட்டை இருந்திருக்கலாம் என தெரிவித்து கடையில் உள்ள மற்ற முட்டைகளை விற்பனை செய்யாமல் திருப்பி அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்த முட்டை பிளாஸ்டிக் முட்டை என்றும் இதனை சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த பிளாஸ்டிக் முட்டை குறித்து உணவு பொருள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிலை தமிழகம் முழுவதும் நீடிக்கிறது. பிளாஸ்டிக் முட்டை சப்ளையாவதை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொதுமக்கள், முட்டை சாப்பிடுவதையே நிறுத்தும் நிலை ஏற்பட்டு தொடா் அச்சத்தில் உள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad