சிரியாவை உலுக்கிய கிளர்ச்சியாளார்களின் கொடூர தாக்குதல்

சிரிய தலைநகரை உலுக்கிய கிளர்ச்சியாளர்களின் திடீர் தாக்குதலின் எதிரொலியாக குறித்த பகுதியிலுள்ள பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, துப்பாக்கி மற்றும் குண்டு தாக்குதல்களினால் பேரதிர்ச்சிக்கு உள்ளான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரச படையினரை இலக்கு வைத்து கிளர்ச்சியாளர்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்குதல்களினால் சிரிய தலைநகரின் கிழக்கு மாவட்டங்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளன.

அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஜபத் ஃபதே அல்-ஷாம் அமைப்புடன் இணைந்த கிளர்ச்சிக் குழுக்கள், அரச படையினரின் நிலைகளை இலக்கு வைத்து டமஸ்கஸின் மையப் பகுதியில் குண்டு மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் முற்றுகைக்கு உட்பட்ட இரு பகுதிகளுக்கு மத்தியில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜோபார் மற்றும் கபூன் மாவட்டங்களிலேயே கடும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அரச போர்விமானங்கள் மூலம் 30இற்கும் மேற்பட்ட விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு கிளர்ச்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad