உங்க பிறந்த தேதிய சொல்லுங்க.. உங்களுக்கு எந்த தொழில் சூப்பரா இருக்கும்-ன்னு சொல்றோம்...!

1, 10, 19, 28
இந்த நாட்களில் பிறந்தவர்கள், நல்ல தலைவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போன்றது மற்றும் இவர்கள் சிறந்த தொழிலதிபராக இருக்கக்கூடியவர்கள். முகேஷ் அம்பானி, பில்கேட்ஸ் போன்றோர் இந்நாட்களில் பிறந்தவர்கள் தான்.

இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு தொழிலதிபர்/குழுத் தலைவர் பதவி சிறப்பானதாக இருக்கும்.

2, 11, 20, 29
இந்நாட்களில் பிறந்தவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள் மற்றும் செய்யும் வேலையை மிகவும் சிறப்பாக, கச்சிதமாக செய்யக்கூடியவர்களாக இருப்பர். மேலும் நல்ல ராஜதந்திரிகளாகவும் இருப்பர். ஷாருக்கான், அமிதாப் பச்சன், லியனார்டோ டிகாப்ரியோ போன்றோர் இந்நாட்களில் பிறந்தவர்கள் தான்.

இந்த நாட்களில் பிறந்தவர்களுக்கு கலை, ஓவியம், நடிப்பு, ஃபேஷன் டிசைனிங் துறை சிறப்பாக இருக்கும்.

3, 12, 21, 30
இந்நாட்களில் பிறந்தவர்கள் இயற்கையாக மனவலிமைப் படைத்தவர்களாக மற்றும் நிதி துறையில் சிறந்தவர்களாக இருப்பர்.

இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு வங்கி, நிதி சம்பந்தமான துறைகள் பொருத்தமாக இருக்கும்.

4, 13, 22, 31
இந்த நாட்களில் பிறந்தவர்கள் மிகவும் வழக்கத்திற்கு மாறாக மற்றும் தனித்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு அபாயம் நிறைந்த வேலைகளில் ஈடுபட விரும்புவர், ஆனால் இவர்களது தவறான முடிவால் அடிக்கடி பல தொல்லைகளை சந்திப்பர்.

இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு கலை மற்றும் நடிப்பு துறை தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.


5, 14, 23
இந்த நாட்களில் பிறந்தவர்கள் நல்ல தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் சரியான முடிவெடுக்கும் சக்தியைக் கொண்டவர்களாக இருப்பர். மேலும் இவர்கள் மற்றவர்களை எளிதில் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைப்பார்கள். இவர்களுக்கு ஒரே மாதிரியான வேலையை செய்ய விரைவில் அலுத்துவிடும்.

எனவே இத்தகையவர்களுக்கு தொழில்நுட்பம், விளையாட்டு, மார்கெட்டிங் போன்ற துறைகள் தான் சிறப்பானதாக இருக்கும்.


6, 15, 24
இந்த நாட்களில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆளப்படுவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் கவர்ந்திழுக்கும் ஆளுமையைக் கொண்டவர்களாக இருப்பர்.

இத்தகையவர்கள் திரைப்படத் துறை, ஹோட்டல் அல்லது விருந்தோம்பல் வணிகங்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டால், பெயரும் புகழும் இவர்களை எளிதில் வந்து சேரும்.


7, 16, 25
இந்நாட்களில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி துறையில் சிறப்பானவர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது. இவர்கள் மிகவும் புதுமையானவர்கள் மற்றும் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பார்கள். நம் கற்பனைக்கு எட்டாத அளவில் சிந்தித்து, செய்யும் காரியத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள்.

இந்த நாட்களில் பிறந்தவர்களுக்கு ஆய்வு சம்பந்தமான துறை அல்லது தனது கற்பனை வளத்தை வெளிக்காட்டும் படியான துறை பொருத்தமானதாக இருக்கும்.


8, 17, 26
இந்நாட்களில் பிறந்தவர்கள், தனது 35 வயது வரை பல போராட்டங்களை சந்திப்பார்கள். இவர்கள் எதையும் நேரடியாக பேசக்கூடியவர்கள் மற்றும் கடுமையாக வேலை செய்யக்கூடியவர்கள். இதனால் தாமதமானாலும் செய்யும் காரியத்தில் வெற்றி காண்பார்கள்.

இந்த நாட்களில் பிறந்தவர்களுக்கு அரசியல், ஆசிரியர் அல்லது சொந்த தொழில், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி போன்ற துறைகள் சிறப்பானதாக இருக்கும்.


9, 18, 27
இந்த நாட்களில் பிறந்தவர்கள் விளையாட்டில் நல்ல ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது. உலகில் உள்ள மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்கள் பலரும் இந்நாட்களில் பிறந்தவர்கள் தான்.

இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு விளையாட்டு, பாதுகாப்பு படைகள் அல்லது ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் சிறப்பாக இருக்கும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad