மனிதர்களை சோதனை செய்கின்ற பறக்கும் தட்டுக்களில் வரும் வேற்றுக்கிரகவாசிகள்.

தற்போதைய அறிவியல் உலகு பல்வேறுபட்ட விடயங்களை மறைத்துக் கொண்டு வருகின்றது. காரணம் உண்மைகள் பகிரங்கமாகும் போது சிக்கல்கள் பல ஏற்படும்.
அந்த வகையில் நவீன உலகில் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது பறக்கும் தட்டுகள். இந்தப் பெயர் ஒருவித அச்சத்தையும் பிரமிப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படுகின்றது.

இருக்கு ஆனால் இல்லை என்ற வகையில் குழப்பத்தில் இருப்பது இது. ஆனால் பறக்கும் தட்டுக்களை கண் ஊடாக பார்த்ததாக உலகெங்கும் செய்திகள் உள்ளன.
அன்றாடம் பல காணொளிகள் இது தொடர்பில் வெளிவந்த வண்ணமே இருக்கின்றது. ஆனாலும் வழக்கம் போலவே ஒரு தரப்பு விஞ்ஞானிகள் பறக்கும் தட்டுக்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.,

அவ்வாறு ஒருவேளை அவை உண்மை என்றால் ரேடார் கருவிகள் அவற்றைத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறி விடும் என்றும் கூறுகின்றனர்.

இப்படி கூறும் விஞ்ஞானிகள் தான் மிகப்பெரிய அளவில் விண்வெளி தொடர்பில் கோடிகளைக் கொட்டி ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.

மற்றொரு புறத்தில், பறக்கும் தட்டுக்கள் என்பவை மிக வேகமாக கிட்டத்தட்ட ஒளியின் அளவிற்கும் வேகமாக பயணிப்பவை எனவும் அதனால் கண்காணிப்பு ரேடாரின் கண்களுக்குச் சிக்குவதில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று நேற்று அல்ல 1960ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் ஒரு இடத்தில், பறக்கும் தட்டு ஒன்று இறங்கியது அதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் பார்த்தனர்.

அதனை பால் ட்ரெண்ட் என்பவர் புகைப்படம் எடுத்தும் வெளியிட்டு இருந்தார். பத்திரிகைகளிலும் இந்தச் செய்திகள் வெளியானது.
இதில் முக்கியமான விடயம் அந்நாட்டு அரசு தொடர்ந்து ஆய்வுகள் ஏதும் முன்னெடுக்காது விடவே செய்திகள் முடக்கப்பட்டன. எனினும் 1947ஆம் ஆண்டுகளிலேயே பறக்கும் தட்டுக்களை உலகெங்கும் பலர் கண்டுள்ளனர்.

மேலும் 1973ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் துறைமுகத்தின் பணிபுரியும் இருவர் பறக்கும் தட்டை கண்டுள்ளனர். அதிலிருந்து இறங்கிய சில உருவங்கள் அவர்கள் இருவரையும் பறக்கும் தட்டுக்குள் கொண்டு சென்று சில ஆய்வுகளைச் செய்தன.

பின்னர் அரை மயக்கத்தில் இருந்த இருவரும் தங்களுக்கு நடப்பனவற்றை உணர முடிந்தாலும் அவர்களால் அந்த பறக்கும் தட்டு மனிதர்களை எதிர்த்து எதுவும் செய்யாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிலமணி நேரங்களில் அவர்களைக் கீழே தள்ளி விட்டு பறக்கும் தட்டு சென்று விட்டது. நீண்ட நேரம் மயங்கிக் கிடந்த அவர்கள் பின்னர் மயக்கம் தெளிந்து உண்மையை அனைவருக்கும் கூறியுள்ளனர்.

ஆனாலும் அவர்கள் கூறியவற்றை எவரும் நம்பவில்லை. ஆனால் மருத்துவர்கள் குழு வந்து அவர்களை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்திச் சோதனை செய்துள்ளனர்.

அதன் மூலம் அவர்கள் பொய் சொல்லவில்லை என்பதும், அமானுஷ்யமான சில அனுபவங்கள் அவர்களுக்கு ஏற்பட்டது உண்மைதான் என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து அமெரிக்கா, கனடா, ரஷ்ய, சீனா உட்பட பல உலக நாடுகள் பல ஆண்டுகளாக பறக்கும் தட்டுக்கள் குறித்து ஆய்வுகளை மும்முரமாக நடத்தி வருகிறார்கள்.

ஆனால் எந்த அரசும் இன்றுவரை பறக்கும் தட்டுகளையோ அல்லது அந்நியர்கள் ( வேற்றுக்கிரகவாசிகள்) பிரவேசத்தையோ வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. இதில் பல்வேறுபட்ட உள்நோக்கங்கள் இருக்கலாம்.

இன்னுமோர் உகலம் என்ற வகை கருத்துகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டால் நிலைமாறும், பல நியதிகளும் நம்பிக்கைகளும் மாற்றம் அடைந்து மனித வாழ்வே சிதைந்து போக வாய்ப்பு உண்டு அதனால் மறைக்கப்படலாம்.

என்றாலும் கூட பிரிட்டன் மட்டும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக தாம் சேகரித்து வைத்துள்ள இரகசிய அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டது.

சுமார் 6000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 1994 தொடக்கம் 2000 ஆண்டு வரையான காலப் பகுதியில் பறக்கும் தட்டுக்கள் குறித்து திரட்டப்பட்ட தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது.

அதில் 1997ஆம் ஆண்டு பிரிட்டன் கன்சவேட்டிவ் கட்சித் தலைவர் மிக்கல் கவாட்டின் இல்லத்தின் மேல் முக்கோண வடிவிலான ஒரு பறக்கும் தட்டு வந்திறங்கிய சம்பவமும் கூட பதிவு
செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் தட்டுகளில் வருகின்றவர்கள் வல்லரசு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒரு சாரர் தெரிவித்து வருகின்றனர். என்றாலும் அவர்கள் உண்மையில் வேற்றுக் கிரகத்தைச் சார்ந்தவர்கள் என்பதே அதிக ஆய்வாளர்களின் நம்பிக்கை.
இதனை உறுதிப் படுத்துகின்றது இப்போதைக்கு மிகப்பெரிய அளவில் நடைபெற்று கொண்டு வரும் விண்வெளித் தேடல்கள்.
இவ்வாறாக இன்று வரை மக்களை அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டு வரும் பறக்கும் தட்டுகள் தொடர்பிலான உண்மைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாடும் வெளியிடும் என்பது காலத்தின் கட்டாயம்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad