அமெரிக்காவை சரமாரியாக தாக்கிய ரஷ்யா..! கதை முடியப்போகிறது

சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகளை, ஐ.எஸ் தீவிரவாதிகள் எனக் கருதி, ரஷ்ய விமானப்படை தவறுதலான வான் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் இயங்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க படைகளும், அந்நாட்டு ஜனாதிபதியிற்கெதிரான கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ரஷ்ய படைகளும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்ய விமானப்படைகள்,


அமெரிக்க படையினரை தீவிரவாதிகள் என நினைத்து, வான் வழி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக அமெரிக்க தரப்பு படைகள் தெரிவித்துள்ளன. சிரியாவில் உள்ள கிராமமொன்றை குறிவைத்து ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில், சிரிய மற்றும் அமெரிக்க கூட்டு படையியினர் சிலர் காயமடைந்ததாக அமெரிக்காவின் சிரியாவிற்கான இராணுவ தலைமை கட்டளைத் தளபதி ஸ்டீபன் டவுண்சென்ட் தெரிவித்துள்ளார்.


வான்வழி இலக்குகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதல் சம்பவமானது படையினரை காயப்படுத்திய நிலையில், ரஷ்ய இராணுவத்தை தொடர்பு கொண்டு, குறித்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறையினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad